பாரதியார் நினைவு நாளில்... எல்லையற்ற மகிழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய இளையராஜா!

By manimegalai aFirst Published Sep 11, 2022, 4:51 PM IST
Highlights

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று  (செப்டம்பர் 11)  அவரது கவிதை வரிகளையும், பாரதியாரின் தொலைநோக்கு பார்வை குறித்தும் பேசி, இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

இதுகுறித்த வீடியோவில், இளையராஜா தமிழக அரசையும், முதலவர் ஸ்டாலினையும் வாழ்த்தி பேசியுள்ளார்... இந்த வீடியோ பதிவில் அவர் பேசியுள்ளதாவது...  “எல்லா வருடங்களும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து, ‘நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? என்று அவன் தன்னை தானே நொந்துகொண்டானில்லையா? ‘நல்லதோர் வீணை செய்தேன் – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ தன்னை உருவாக்கிய அம்மையே சக்தியே என்னை நலங்கெட புழுதியில் ஏறிந்துவிடுவாயோ என அவனின் நொந்தல் என்னை மிகவும்வருத்தும். அவருக்கு ஆறுதல் சொல்வதற்காகவே... பாரதிக்கு ஆறுதல் சொல்லும் வகையில் என் பட பாடலில் நான் பதில் சொல்லியிருக்கிறேன். அழகி படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘உன் குத்தமா என் குத்தமா’ பாடலில் வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு என்று பாரதியாருக்கு நான் ஆறுதல் சொல்லியிருக்கிறேன்.

மேலும் செய்திகள்: 50 வயதை தாண்டியும்... 25 வயது யங் ஹீரோயின் போல் வெல்வட் புடவையில் தகதகவென மின்னும் ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன்!
 

பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை. நாட்டை பற்றி அவன் எப்படி எல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கிறான் என பார்த்தால் வியக்க கூடியது. எந்த ஒரு கற்பனையாளனுக்கும் வராத கற்பனையை அவன் இந்தியாவை பற்றி கண்டு கொண்டிருந்தான். சிங்கள தீவனுக்கு ஒரு பாலம் அமைப்போம் போன்ற அவரது கவிதை வரிகளை கூறி பாரதியின் நினைவுகளை போற்றி புகழ்ந்துள்ள இளையராஜா, குறிப்பாக நதியில் இணைப்பு திட்டத்தினை பாரதியார் 'வைத்தால் ஓடி வரும் நீரின் மிகையால்... மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்று அன்றே தன்னுடைய பாடல்களில் பாரதி கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார் இளையராஜா.

மேலும் செய்திகள்: இதைவிட வேறென்ன வேண்டும்.. சூர்யா - ஜோதிகா திருமண நாளில் தந்தை சிவகுமார் செய்த சிறப்பான செயல்! குவியும் வாழ்த்த
 

எனவே அவனை நினைத்து, நாம் மரியாதையும், வணக்கமும், அஞ்சலி செலுத்துவது நமக்கு புண்ணியத்தை சேர்க்கும். பாரதியாரின் நினைவு நாளை நினைவில் கொண்டு தமிழக அரசு இந்த நாளை அவரின் பெயரால் அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழக அரசு வாழ்க! மு.க.ஸ்டாலின் வாழ்க” என இளையராஜா தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

மகாகவி பாரதியின் நினைவு நாளில், வாழ்க பாரதியின் புகழ். pic.twitter.com/pOOwpCOo43

— Ilaiyaraaja (@ilaiyaraaja)

 

click me!