நோயாளிகளுக்கு மருந்தாகும் இளையராஜா இசை..! தீவிர ஆராய்ச்சி நடத்தி வரும் மருத்துவர்கள்..!

First Published Aug 4, 2018, 4:37 PM IST
Highlights

பொதுவாகவே பாடல்கள் என்பது நம்முடைய நினைவுகளுக்கு உயிர்கொடுக்கும் அங்கமாகவே பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் பாடல்கள்  ஒரு வித வித்தியாச உணர்வினை ஏற்படுத்தும்.

பொதுவாகவே பாடல்கள் என்பது நம்முடைய நினைவுகளுக்கு உயிர்கொடுக்கும் அங்கமாகவே பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் பாடல்கள்  ஒரு வித வித்தியாச உணர்வினை ஏற்படுத்தும். காலங்கள் கடந்து, வாழ்க்கையில் நடந்த துக்கங்கள், இன்பங்கள் ஆகியவற்றை மறந்து திரியும் மனிதருக்கும் அவரின் மனதிற்கு நெருக்கமான பாடல் அவனுடைய நினைவுகளை மீட்டெடுக்கும் வல்லமையுள்ளது. 

எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு சில பாடல்களை நாம் கேட்க்கும் போது அந்த இசையில் மயங்கி அந்த வரிகளோடு  ஒன்றிணைந்து மனம் கல்லாகிவிடும். எவ்வளவு துயரத்தில் இருந்தாலும் ஒரு சில பாடல்கள் அந்த துயரத்தில் இருந்து நம்மை மீட்டு வேறொரு உலகத்திற்கு அழைத்து செல்லும். இவ்வாறு இசைக்கென ஒரு தனித்துவமே உள்ளது.

இவ்வாறு தனித்துவமிக்க இசையின் ஞானி இளையராஜாவின் இசைக்கென உலகமெங்கும் பலகோடி ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் கிட்டதட்ட மூன்று தலைமுறை அவருடைய பாடல்களை கேட்டே வளர்ந்துள்ளது என்றே கூறலாம். 

1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானியின் இசை தற்போது மருத்துவத்துறையில் பயன்படுத்துவதற்க்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியினை சிங்கப்பூரை சேர்ந்த மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

click me!