இசையே உருவான இளையராஜாவின் பிறந்தநாள் இன்று...

Asianet News Tamil  
Published : Jun 02, 2017, 05:20 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
இசையே உருவான இளையராஜாவின் பிறந்தநாள் இன்று...

சுருக்கம்

ilaiyaraja birthday

பல உயர் பதவிகள் பெற்றாலும் இளையராஜாவின் இசைக்கு அடிமையாக உள்ள மனிதர்கள் ஏராளம். இசையை ரசிக்க ரசனை இருந்தால் போதும்... என்பது போல், பாமர மக்களையும் தன்னுடைய இசையால் கட்டிபோட்டவர் இளையராஜா.

அன்னக்கிளி என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்து இளையராஜா, இன்று தமிழையும் தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட  தென்னிந்திய மொழி படங்களில் 4500 மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் காதல் , நட்பு, பிரிவு சோகம், மகிழ்ச்சி, கொண்டாட்டம், தாய்மையின் பெருமை என எல்லாவித சூழலையும் ஆக்கிரமிப்பது இளையராஜா பாடல்கள் தான். குறிப்பாக அந்த கால காதலர்கள் முதல் இந்த கால காதலர்களுக்கும் தங்களது காதலை வெளிப்படுத்த இருக்கும் ஒரே வாய்ப்பு இளையராஜாவின் பாடல்கள் தான். 

இன்றியமையாத இவரது இசைப்பயணம் இன்று வரை நீண்டு கொண்டே   இருக்கிறது, இவரது சாதனையை முறியடிக்க இன்னொரு கலைஞன் தான் வரவேண்டும்.

ஐந்து முறை தேசிய விருது, லதா மங்கேஷ்க்ர் விருது, மலையாள திரையுலகத்தில் பல்வேறு விருதுகள் என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 

இவருடைய வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும், அத்தனையும் தன்னுடைய சாதனைக்கான படி கற்களாக மாற்றி இன்று வரை வீர நடை போட்டுக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சாதனை மனிதனுக்கு  நியூஸ் பாஸ்டின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!