
இசைஞானி இளையராஜா மாநிலங்களவையில் நியமன எம்.பி.யாக நியமித்து மத்திய அரசு கவுரவப்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று இரவு வெளியானதில் இருந்தே இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என ஏராளமான பிரபலங்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தேனி மாவட்டத்தில் பிறந்த வைரம்... இசைஞானி முதல் மாநிலங்களவை உறுப்பினர் வரை! மறக்க முடியாத 10 நினைவுகள்!
அவர்கள் அனைவருக்கும் மொத்தமாக நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா. இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் . உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி” என அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... எம்.பி பதவி இப்படித்தான் கிடைச்சதா? கலாய்க்கும் நெட்டிசன்கள்.. ஒன்றுதிரண்ட பாஜக - ட்விட்டரில் போர் !
இதுதவிர பிரதமர் மோடிக்கு தனியாக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் இளையராஜா. அந்த பதிவில், நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இசை, கலை மற்றும் கலாச்சாரத்தின் அழகை நம் சமூகத்தினரிடையே கொண்டு சேர்க்க கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கிறேன்.
இந்திய அரசு கொடுத்த இந்த அங்கீகாரமானது, இசை மற்றும் கலையை ஒரு ஆர்வமாகவும், தொழிலாகவும் இளைய தலைமுறையினர் தொடரத் தூண்டும். இது இந்தியாவின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு புத்துயிர் பெறச் செய்துள்ளது என நெகிழச்சி உடன் பதிவிட்டுள்ளார் இளையராஜா.
இதையும் படியுங்கள்... இளையராஜா மட்டுமில்ல... ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தும் மாநிலங்களவை எம்.பி. ஆக நியமனம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.