இளையராஜா எம்.பி ஆனது பெருமையான விஷயமே இல்ல... இயக்குனர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு

By Ganesh AFirst Published Jul 7, 2022, 9:37 AM IST
Highlights

R Parthiban : இயக்குனர் லிங்குசாமி இயக்கிய வாரியர் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பார்த்திபன், இளையராஜா எம்.பி. ஆனது குறித்து பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ள விஷயம் என்றால் அது இளையராஜா எம்.பி ஆனது தான். அவரை மாநிலங்களவை நியமன எம்.பி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக நேற்று இரவு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து இளையராஜாவுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... சினிமாவில் மேக்கிங் செலவைவிட ஹீரோஸின் சம்பளம்தான் அதிகம்! அப்புறம் எப்படி படம் நல்லாவரும்- பார்த்திபன் ஆதங்கம்

இளையராஜாவுக்கு ஒருபுறம் வாழ்த்து மழை பொழிந்தாலும், மறுபுறம் அவரை ட்ரோல் செய்தும் வருகின்றனர். காரணம் அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மோடியையும் அம்பேத்காரையும் ஒப்பிட்டு ஒரு புத்தகத்தின் முன்னுரையை எழுதி இருந்தார். இவ்வாறு மோடியை புகழ்ந்ததால் தான் அவருக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டு உள்ளதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... டாப் இந்தி நடிகர்களின் படங்களெல்லாம் பிளாப்... தென்னிந்திய படங்களின் ஆதிக்கத்தால் ஆட்டம் கண்ட பாலிவுட்

இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி இயக்கிய வாரியர் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், பாரதிராஜா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் பார்த்திபன், இளையராஜா எம்.பி. ஆனது குறித்து பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படியுங்கள்... சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா... எப்போ தெரியுமா?

அதில் அவர் பேசியதாவது : இளையராஜா எம்.பி ஆகி உள்ளதாக செய்தி வந்துள்ளது. என்னைப் பொருத்தவரை அது பெருமையான விஷயமே இல்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே ஒரு பெரிய MP, Music of paradise இளையராஜா இப்போது எம்.பி ஆகி இருப்பது ஒரு சாதாரண விஷயம் தான் என புகழ்ந்து பேசியுள்ளார். இயக்குனர் பார்த்திபன் இயக்கி வரும் ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கிற்கு இளையராஜா இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!