
கவிஞரும், இயக்குனருமான லீனா மணிமேகலை சமீபத்தில் காளி என்கிற ஆவணப்பட போஸ்டரை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். அந்த போஸ்டரில் காளி போல் வேடமணிந்திருந்த பெண் ஒருவர் வாயில் சிகிரெட் வைத்திருப்பது போலவும், கையில் LGBT சமூகத்தின் கொடியை பிடித்திருப்பது போலவும் இருந்தது.
இதையும் படியுங்கள்... இளையராஜா எம்.பி ஆனது பெருமையான விஷயமே இல்ல... இயக்குனர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு
இந்த போஸ்டரை பார்த்து ஆத்திரமடைந்த நெட்டிசன்கள், இந்துக் கடவுளை அவமதிக்கும் விதமாக போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என கண்டனக் குரல்கள் எழுப்பி வந்தனர். இதுதவிர அவர் மீது வழக்கறிஞர் ஒருவர் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் லீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்... சினிமாவில் மேக்கிங் செலவைவிட ஹீரோஸின் சம்பளம்தான் அதிகம்! அப்புறம் எப்படி படம் நல்லாவரும்- பார்த்திபன் ஆதங்கம்
நேற்று லீனா மணிமேகலையில் இந்த சர்ச்சைக்குரிய போஸ்டரை நீக்கி டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதேபோல் டொரண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம் இந்த ஆவணப்படத்தை திரையிடப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தற்போது மேலும் ஒரு சர்ச்சைக்குரிய பதிவை போட்டுள்ளார் லீனா மணிமேகலை.
இதையும் படியுங்கள்... சண்டையால் உடைந்த வெற்றிக் கூட்டணி... பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் சந்தோஷ் நாராயணன் இல்லை
அதன்படி அவர் தற்போது சிவன் - பார்வதி வேடமிட்ட இருவர் ஜோடியாக நின்று சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து இது வேறு எங்கேயோ எடுத்த புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார். காளி போஸ்டருக்கே கொதித்தெழுந்த நெட்டிசன்கள், தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த பின் அவரை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.