
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அதில் ஒரே ஒரு நாள் கலந்து கொண்டு பலரையையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஜூலி.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது கூட பலருக்கும் தெரியாது. “சின்னம்மா சின்னம்மா ஓ பி எஸ் எங்கம்மா” என்று அவர் எழுப்பிய முழக்கம்தான் பலரையும் அதிர வைத்தது. அதன் பின்னர் அவர் எங்கிருக்கிறார்? என்று கூட யாருக்கும் தெரியாது. ஊர், பேர் தெரியாத அந்த பெண்ணை, அனைவரும் தமிழச்சி என்றும், ஜல்லிக்கட்டு போராளி என்றுமே அழைக்க ஆரம்பித்தனர்.
வலைத்தளங்களில் அவரை பாராட்டி எண்ணற்ற பதிவுகளும், மீம்ஸ்களும் குவிய ஆரம்பித்தன. சில ஊர்களில் அந்த பெண்ணுக்கு பேனர்கள் கூட வைக்கப்பட்டன. அந்த அளவுக்கு, தமிழ் மக்களிடையே தங்கள் வீட்டு பெண்ணாக அறியப்பட்ட, ஜூலியானா என்ற அந்த பெண், விஜய் டி.வி யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார்.
பல மொழி டிவி சேனல்களில் வெற்றி பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சி, இப்போது தமிழுக்கு அறிமுகம் ஆகியுள்ளது. விஜய் டி.வி யில் நடிகர் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ள ஒரு பெரிய வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு வசிக்க வேண்டும் என்பது விதிமுறை. போட்டியாளர்களை மொத்தம் 30 சிசிடிவி காமிராக்கள் கண்காணிக்கும்.
தினமும் இரவு 9 மணி முதல் 10 மணிவரை விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. அன்றைய தினம் நடந்தவற்றில் முக்கியமானவற்றை தொகுத்து அந்த நேரத்தில் காண்பிக்கபடும். அதில், போட்டியாளர்களில் ஒருவராக உள்ள ஜூலி, நடிகர் ஸ்ரீ-யிடம் பேசிய உரையாடல் சமூகவலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சியின் முதல் நாளே காயத்ரி ரகுராமின் டுவிட்டர் கணக்கிலிருந்து பதிவு சென்றுள்ளது. அதேபோல் கணேஷிம் அவரது மனைவியை மிஸ் பன்னுவதாக டுவீட்டியுள்ளார். இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனையடுத்து, நடிகர் ஸ்ரீ சற்று புலம்பிக்கொண்டே இருந்தார். இந்நிலையில்தான், அந்த வீட்டிற்குள் என்ன நடந்தது என்ற வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டது.
அதில், ஒநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ சோகமாக இருக்க, அவர் அருகில் ஜல்லிட்டிற்கு ஆதரவான போராட்டத்தில் முழக்கமிட்டு பிரபலமான ஜூலி அமர்ந்திருந்தார்.
அதில் ஸ்ரீ யிடம் “ ஏன் போகனும்னு நினைக்கிற.. இந்த வீட்டுக்குள்ள வரும்போது எல்லோரையும் யாராவது கட்டிப்புடிக்கிறாங்க.. எனக்கு யாருமே இல்லை.. விட்டுப் போகனும்னு நினைக்காதே.. எனக்காக இரு.. என்னைப் பத்தி நினைச்சிப் பாரு” என ஜூலி கூறினார். இதனால் தமிழகமே அதிர்ந்துள்ளது. போராளியாக பார்த்த ஒரு பெண் இவ்வாறு நடந்து கொள்கிறாரே என்று மக்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டனர். மேலும் இணையத்திலும் ஜூலியும் பிக்பாஸும்தான் ஹாட் டாபிக்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக பங்கேற்பாளர் நடிகை ஆர்த்திக்கும் ஜூலிக்கும், படுக்கையை தேர்வு செய்வதில் இருந்து அனைத்திலும் முட்டல், மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
செவிலியர் வேலையை விட்டுவிட்டு நேரப்போக்கிற்காக, ஜூலி இங்கு வந்துள்ளார் என ஆர்த்தி கூறும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இதனால், ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விரைவில் வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, ஜல்லிக்கட்டு போராளியாக அறியப்பட்ட ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எதற்காக இப்படி பெயரை கெடுத்து கொள்ள வேண்டும்? என்றும் வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 3 -ஆவது நாள் ஒளிபரப்படுவது என்ன என்பது குறித்து விஜய் டிவி ப்ரோமோ வெளியிட்டுள்ளது. அதில் சமையலறையில் ஆர்த்தி, காயத்ரி, ஜூலி, நமீதா, ஆரார் ஆகியோர் இருந்தனர். அப்போது கடந்த சில மாதங்களுக்கு முன் மெரீனாவில் நடந்த போராட்டத்தின் போது போலீஸ் தடியடி நடத்தியதற்கு காரணமே இவங்கதான் என்று ஜூலியை ஆர்த்தியும், காயத்ரியும் கைகாட்டுகின்றனர்.
அப்போது ஜூலியோ தான் திட்டியது மூன்று தலைவர்களைதான் என்றார். அதற்கு ஆர்த்தி தனிப்பட்ட முறையில் ஒருவரது பெயரை குறிப்பிட்டு பாயின்ட் அவுட் செய்தீர்கள் என்றார. அதற்கு அந்த பெண்ணோ பாயின்ட் அவுட் செய்வதில் என்ன தவறு என்று கேட்கிறார். இப்படியே போன பேச்சில், ஜல்லிக்கட்டுக்கான போராளி என்றால் ஜல்லிக்கட்டுக்காக மட்டும்தான் போராட வேண்டும் என்று காயத்ரி கண்டிப்புடன் கூறினார். உடனே ஆர்த்தி ஏன் விவசாயிகளுக்காக போராட வில்லையே என்றார். அதற்கு ஜூலி, எனக்கு ஆசைதான் ஆனால்... என்று பதில் சொல்வதற்குள் முந்தி கொள்ளும் ஆர்த்தி விவசாயிகள் போராட்டத்தின்போது ஏன் டைம் இல்லையா? என்று நக்கலாக கேட்கிறார்.
ஜூலியிடம், அப்போ நீங்க போராளினு கூறவே கூடாது என்றார் காயத்ரி. அதற்கு அவரு்ம நான் அப்படி கூறிகொள்வதே இல்லையே என்றார். அத்துடன் ப்ரோமோ காட்சிகள் முடிந்தன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேச என்ன காரணம்?
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வறுத்தெடுக்கப்பட்டவர்கள் மோடி, சசிகலா, ஓபிஎஸ் இந்த ஜூலியும் இந்த மூன்று பேரையும் குறிப்பிட்டு கோஷம் எழுப்பினார். பாஜகவைச் சேர்ந்தவர் காயத்ரி ரகுராம், அதிமுகவைச் சேர்ந்தவர் ஆர்த்தி இவர்கள் இருவரும் இவர்களது கட்சியை போலவே கடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக வாய்திறக்காமல் இருந்தனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து ஜூலியை வறுத்தெடுக்கிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.