பெங்களூரு தாக்குல்... புகார் கொடுத்தால் தேசிய விருது பறிபோகும்... இதனால்தான் அடக்கி வாசிக்கிறாரா விஜய்சேதுபதி!

Published : Nov 09, 2021, 03:58 PM IST
பெங்களூரு தாக்குல்... புகார் கொடுத்தால் தேசிய விருது பறிபோகும்... இதனால்தான் அடக்கி வாசிக்கிறாரா விஜய்சேதுபதி!

சுருக்கம்

புகார் கொடுக்க விசய் சேதுபதியார் அஞ்சுகின்றார். காரணம் புகார் கொடுத்தால் அவர் பேசிய தேசவிரோத பேச்சுக்கள் வெளிவரும், விருதும் பறிபோகும்.

சமீபத்தில் இறந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு மரியாதை செலுத்த சென்ற விஜய் சேதுபதி தாக்கப்பட்டுள்ளார். விஜய் சேதுபதி பெங்களூர் விமான நிலையத்தில் சென்று கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து ஒருவர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பது போன்ற ஒரு வீடியோ காட்சி வெளியானது. ஆனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன், கருத்து தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், ‘’விசய் சேதுபதியினை நானே தாக்கினேன் என பகிரங்கமாக சொல்கின்றார் தேசியவாதி ஒருவர். ஆனால், புகார் கொடுக்க விசய் சேதுபதியார் அஞ்சுகின்றார். காரணம் புகார் கொடுத்தால் அவர் பேசிய தேசவிரோத பேச்சுக்கள் வெளிவரும், விருதும் பறிபோகும்.

விசய் சேதுபதியாரின் இம்சைகள் எல்லை மீறுகின்றன‌ . அவர் சம்பாதிக்க இந்நாடு வேண்டும், அவர் உல்லாசமாய் வாழ இத்தேசம் வேண்டும், இவர் படம் நடிக்கவும் அதில் சம்பாதிக்கவும் இந்திய ராணுவம் எல்லையில் காவல் இருக்க வேண்டும். உளவுதுறையும் காவல் அமைப்புக்களும் நாட்டை காக்க வேண்டும்.

இவரோ உல்லாசமாக நடித்துவிட்டு காசும் விருதும் குவிப்பார், குவித்துவிட்டு "இது நாடா" என்பார். இந்த நாடு பிடிக்கவில்லை என்றால் அவர் ஆப்கன் முதல் அமெரிக்கா வரை செல்லட்டும். ஆனால் எந்த நாட்டில் கிழித்துவிடுவார் என பார்க்கலாம். "இந்தியா ஒரு நாடா?" என கேட்கும் அந்த மட சேதுபதி, என்ன மண்ணாங்கட்டிக்கு துபாயில் இருந்து நாடு திரும்பி நடிக்க வேண்டும், ஆப்ரிக்கா பக்கம் ஓடினால்தான் என்ன?

பசும்பொன் தேவர் அய்யா அவர்கள் சுத்தமான இந்து, பரிசுத்தமான இந்தியன் அவரை பற்றி பேச விசய் சேதுபதி எனும் மடையனுக்கு, அந்த தேசவிரொதிக்கு கொஞ்சமும் அருகதை இல்லை. இன்னும் அவர் அப்படி பேசிதிரிந்தால் அவருக்கும் அவர் சினிமா வாழ்க்கைக்கும் அது நல்லதல்ல. விசய் சேதுபதியினை அடித்த நபரின் நடவடிக்கை பற்றி நாம் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் அவரின் தேசாபிமானத்தை நாம் வரவேற்கின்றோம். தேசத்தை பற்றி தவறாக பேசும் எதிரிகளை மட்டுமல்ல உள்நாட்டு தேசவிரோதிகளையும் விட கூடாது, அவ்வகையில் நல்ல இந்தியனாக அவர் இருக்கின்றார், இந்தியா இன்னும் நிலையாக நிற்கின்றது என்றால் இம்மாதிரி தேசாபிமானிகளாலேதான்.

அவரின் தேசபற்று வாழ்க, இப்படி கோடான கோடி தேசபக்தர்கள் இம்மண்ணில் உண்டு என்பதை உணர்ந்து "சகதிபதி"  தன் வாயினை அடக்குதல் நல்லது’’ என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?
Baahubali Facts: முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டம்.. ராஜமௌலி கதறி அழுத நாள்! பாகுபலி சந்தித்த பெரிய நெருக்கடி