100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபலம் ; உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகை மறைவு......

100க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றிய நடிகை கோழிக்கோடு சாரதா இன்று அதிகாலை கோழிக்கோடு மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோழிக்கோடு வெள்ளிபரம்பைச் சேர்ந்த சாரதா நாடக நடிகராக தனது நடிப்பைத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டு வெளிவந்த 'அங்காக்குறி' திரைப்படத்தில்தான் அவர் திரைப்படங்களில் முதல்முறையாக நடித்தார். இதை தொடர்ந்து 1980களின் நடுப்பகுதியில் ஐ.வி.சசியின் 'அனுபந்தம்',  'அன்யாருடே பூமி' போன்ற படங்களில் நடித்துள்ளார். 'உத்சவ பிட்டேன்னு', 'சதயம்', ' சல்லாபம் ', 'கிளிச்சுண்டன் மாம்பழம்', 'அம்மாளிலிகூடு', 'நந்தனம்', 'யுகபுருஷன்', 'குட்டி ஸ்ராங்கு', 'என்னு நிண்டே மொய்தீன் ' உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட வெற்றி  படங்களில் நடித்துள்ளார்.  

Latest Videos

சல்லாபம்' படத்தில் அவரது கதாபாத்திரம் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்றாகும். கோழிக்கோடு சாரதா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் சின்ன திரை ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றுள்ளார். 84 வயதான இவருக்கு  உமாதா, சஜீவ், ரஜிதா, ஸ்ரீஜித் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இதய நோய் சிகிச்சை பெற்று வந்த சாரதா நேற்றிரவு மூச்சு திணறல் காரணமாக கோழிக்கோட்டில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை சாரதாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை  அடுத்து சிகிச்சை பலனின்றி சாரதா உயிரிழந்துள்ளாதார். இவரது மறைவிற்கு திரைபிரபலங்களும் பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

click me!