RRR Second Single: நாட்டு கூத்து பாடலின் ப்ரோமோ வெளியானது..!

By manimegalai aFirst Published Nov 9, 2021, 1:59 PM IST
Highlights

ராஜமௌலி (Rajamouli) இயக்கத்தில், ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt) உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள 'RRR ' திரைப்படத்தின் 'நாட்டு கூத்து ' பாடலின் ப்ரோமோ மற்றும் இந்த பாடலின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

ராஜமௌலி (Rajamouli) இயக்கத்தில், ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt) உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள 'RRR ' திரைப்படத்தின் 'நாட்டு குத்து' பாடலின் ப்ரோமோ மற்றும் இந்த பாடலின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்களின் வீர தீர நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. “பாகுபலி-1”, “பாகுபலி-2” என இரண்டு பாகங்களாக வெளியாகிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதனைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு   “பாகுபலி” இயக்குநர் ராஜமெளலி “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்: Abhirami Venkatachalam: கொழு கொழு அழகில்... தாவணியை பறக்க விட்டு இடையை காட்டி பந்தாவாக போஸ் கொடுத்த அபிராமி!

 

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி தாறுமாறு வைரலானது. பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அரசு அனுமதி கொடுத்த பின்னர் மீண்டும் படப்பிடிப்பை துவங்கிய படக்குழுவினர் தற்போது இந்த படத்தை முழுவதுமாக முடித்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: Aishwarya Baskaran: முதல் முறையாக மகளுடன் வீடியோ வெளியிட நடிகை ஐஸ்வர்யா? ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

 

ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளும் இப்போதே துவங்கி விட்டது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து கீரவாணி இசையில் அனிரூத் பாடிய, 'நட்பு' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டு, இந்த பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: Ajithkumar: அஜித் மகளா இது..? அம்மா ஷாலினியை மிஞ்சிய அழகில்.. கண்ணாடியோடு செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த அனோஷ்கா!

 

மேலும் தற்போது இந்த வெளியாகியுள்ள இந்த பாடலின் புரோமோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் சுமார் 43 கோடிக்கு கைப்பற்றி உள்ளது குறிப்பிடதக்கது.

click me!