Aishwarya Baskaran: முதல் முறையாக மகளுடன் வீடியோ வெளியிட நடிகை ஐஸ்வர்யா? ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

Published : Nov 09, 2021, 11:50 AM IST
Aishwarya Baskaran: முதல் முறையாக மகளுடன் வீடியோ வெளியிட நடிகை ஐஸ்வர்யா? ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

சுருக்கம்

பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளும் (Lakshmi), நடிகையுமான ஐஸ்வர்யா (Aishwarya) முதல் முறையாக தன்னுடைய மகளுடன் வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.  

பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா முதல் முறையாக தன்னுடைய மகளுடன் வெளியிட்டுள்ள வீடியோ வெளியாகி, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

பிரபல நடிகை லட்சுமி மகள் ஐஸ்வர்யா,  தன்னுடைய அம்மாவை போலவே திரையுலகை தேர்வு செய்து 1989 ஆம் ஆண்டு, தெலுங்கு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களை தேர்வு செய்து நடித்த இவரை, தமிழில் 'நியாயங்கள் ஜெயிக்கும்' படத்தின் மூலம் இயக்குனர் சிவச்சந்திரன் அறிமுகப்படுத்தினார்.

மேலும் செய்திகள்: Ajithkumar: அஜித் மகளா இது..? அம்மா ஷாலினியை மிஞ்சிய அழகில்.. கண்ணாடியோடு செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த அனோஷ்கா!

 

இதை தொடர்ந்து, பல தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தாலும்... அந்த படங்கள் அனைத்தும் தோல்வியை மட்டுமே சந்தித்தது. இவருடைய வாழ்க்கையில் திருப்புமணியை ஏற்படுத்தியது என்றால் அது ரஜிகாந்த் நடிப்பில் வெளியான 'எஜமான்' திரைப்படம் தான். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்திய துவங்கிய இவர், ஹீரோயினாக மட்டும் இன்றி... குணச்சித்திர வேடங்களையும் தேர்வு செய்து நடிக்க துவங்கினார். தற்போது வரை பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: BiggBoss Tamil 5: பிக்பாஸ் வீட்டில் ஊற்றெடுக்கும் புது காதல்..! சந்துல சிந்து பாடும் இந்த ஜோடியை கவனிசீங்களா?

 

இவர் தன்வீர் அஹமத் என்பவரை கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். அன்னயா என்கிற ஒரு மகள் ஐஸ்வர்யாவுக்கு உள்ள நிலையில், மீடியாக்களின் கண்களில் தன்னுடைய மகளை இதுவரை காட்டாமல் பொத்தி பொத்தி வளர்த்து வந்தார்.

மேலும் செய்திகள்: Priya Mani: கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரியாமணி? ஒற்றை புகைப்படத்தால் ஒட்டு மொத்த வதந்திக்கு பதிலடி!

 

இந்நிலையில் முதல் முறையாக தன்னுடைய, மகள் அனன்யாவுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர்... உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த வீடியோ பதிவும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்