சூரி ஹீரோவா நடிக்கும் படத்தின் ஹீரோயினி இந்த பிரபலத்தின் தங்கையா ?

Kanmani P   | Asianet News
Published : Nov 09, 2021, 11:32 AM IST
சூரி ஹீரோவா நடிக்கும் படத்தின் ஹீரோயினி இந்த பிரபலத்தின் தங்கையா ?

சுருக்கம்

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜீ.வியின் தங்கை பவானி ஸ்ரீ  நாயகியாக நடித்து வருகிறார்.

கே. சுபாஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான நினைவிருக்கும் வரை படத்தில் சிறு ரோலில் நடித்ததன் மூலம் திரையுலக பயணத்தை துவங்கிய சூரி வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா பிரியராக வந்து பேமஸ் ஆனவர். இதை தொடர்ந்து பல படங்களில் சூரி தோன்றியிருந்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் கோடி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனத்தில் ஆழப்பதிந்து இருந்தார்.

இதன்தொடர்ச்சியாக சிவகார்த்தியேன் - சூரி கூட்டணியில் வெளியான ரஜினி முருகன், சீம ராஜா உள்ளிட்ட படங்கள் சூரியை நல்ல நகைச்சுவை நாயகனாக ரசிகர்கள் மத்தியில் இனம் காண்பித்தது. அண்ணாத்த படத்தை அடுத்து 2022-ல் திரைக்கு வரவுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் நடித்து வரும் சூரி தனது வேறொரு பரிமாணமாக நாயகன் உருவை எடுத்துள்ளார். 

பொல்லாதவன்,  ஆடுகளம், விசாரணை,  வடசென்னை, அசுரன் என மாறுபட்ட கதை களத்தை கொடுத்த  வெற்றி மாறன் தற்போது நடிகர் சூரியை நாயனாக வைத்து படம் இயக்கி வருகிறார். போலீஸ்கரராக சூரி நடித்து வரும் இந்த படமும் ஏழை மக்களின் மீது காவல்துறை நடத்திய வக்கிரமத்தின் சாயலாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், இயக்குனர் கவுதம்மேனன் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். அதோடு ஜெய் பீம் படத்தில் கொடூர காவலராக தோன்றி மிரட்டியிருந்த முன்னாள் காவலர் தமிழ் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததோடு காவலராகவும் நடித்துள்ளார்.மாறுபட்ட தோற்றத்தில் தோன்றவுள்ள இதன் கதாநாயகி பிரபல இசையமைப்பாளர் ஜீ.வியின் சகோதரி பவானி ஸ்ரீ. இவர் ஏற்கனவே  விஜய் சேதுபதியின் கா/ பெ ரணசிங்கம், நண்பன் ஒருவன் வந்த பிறகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதல் முறையாக பவானி ஸ்ரீ நாயகியாக நடிக்கும் இந்த படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசை அமைக்கிறார். சத்தியமங்கலம், செங்கல்பட்டு, திண்டுக்கல் என தனது இரண்டு கட்ட படப்பிடிப்புகளை முடித்துள்ள விடுதலைக்கு கலை இயக்குனராக ஜாக்கி பணிபுரிந்து வருகிறார்.

சமீப காலமாக பிற்படுத்தப்படடவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் சார்ந்த கதையமைப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதோடு பல விருதுகளையும் தட்டி செல்கிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள விடுதலை நடிகர் சூரிக்கும், படக்குழுவினருக்கு எந்தவிதமான வெற்றியை பெற்று கொடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்