Pa. Ranjith: திமுகவிற்கு அடுத்த ஆட்சியில் ஆதரவு கொடுக்க மாட்டேன்.. இது ஒரு எச்சரிக்கை.. பா.ரஞ்சித்!

By vinoth kumar  |  First Published Jul 19, 2024, 12:13 PM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் இயக்குநர் பா.ரஞ்சித் திமுக அரசுக்கு எதிராக காட்டமாக பதிவிட்டிருந்தார். 


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்கே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் இயக்குநர் பா.ரஞ்சித் திமுக அரசுக்கு எதிராக காட்டமாக பதிவிட்டிருந்தார்.  பெரம்பூரில்  ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? என காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? ஆம்ஸ்ட்ராங் கொலையை சுட்டிக்காட்டி திமுக அரசை விளாசும் பா.ரஞ்சித்!

இந்நிலையில், என்ஜாயி என்சாமி பாடலின் மூலம் பிரபலமடைந்தவர் பாடகர் அறிவு. அவரது இசையில் உருவாகியுள்ள வள்ளியம்மா பேராண்டி ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப்-பில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் திமுகவுக்கு வாக்களித்தால் ஏதேனும் மாற்றம் வரும் என்று தான் வாக்களித்தேன். ஆனால் திமுக, அதிமுக எந்த ஆட்சி வந்தாலும் தலித் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. தமிழ்நாட்டில் ஆம்ஸ்ட்ராங்கின் நிலை மீண்டும் நீடித்தால் திமுகவுக்கு அடுத்த தேர்தலில் ஆட்சியில் ஆதரவு கொடுக்க மாட்டேன். இது ஒரு எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க:  BSP | Pa Ranjith | தமிழ்நாட்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவர் பா. ரஞ்சித்தா?

மேலும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்கே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்றால், சிபிஐ விசாரணை கோருவோம் என்றார். ஏற்கனவே தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த மாநிலத்தலைவராக இயக்குநர் பா. ரஞ்சித் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக  கூறப்பட்டு வரும் நிலையில் ஆளுங்கட்சி எதிராக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!