அருமை நண்பரை இழந்து விட்டேன்... விவேக் மரணம் குறித்து நடிகர் நாசர் நெகிழ்ச்சி அறிக்கை!

By manimegalai aFirst Published Apr 17, 2021, 1:45 PM IST
Highlights

சினிமா பிரச்சனை முதல், சமூக பிரச்சனை வரை.... குரல் கொடுத்து வந்த, விவேக் மறைவுக்கு, பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இன்று காலை, நடிகர் நாசர் விவேக்கிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையி, தற்போது நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 
 

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில், நடிகர் விவேக் அனுமதிக்கப்பாலும், சிகிச்சைக்கு பின் சிங்கம் போல் எழுந்து வந்து பல படங்களில் நடிப்பார் என, நினைத்த பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கனவை, மெய்ப்பிக்கவிடாமல் இந்த உலகை விட்டே சென்று விட்டார் விவேக். இவரது இழப்பு, தமிழ் திரையுலகினரும் ஈடு இணை இல்லாதது. நல்ல மனிதர், எளிமையான மனிதர். ஜனங்களின் கலைஞர் என இவர் மீது ரசிகர்களும், பிரபலங்களும் அன்பை பொழிந்து வந்தனர்.

சினிமா பிரச்சனை முதல், சமூக பிரச்சனை வரை.... குரல் கொடுத்து வந்த, விவேக் மறைவுக்கு, பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இன்று காலை, நடிகர் நாசர் விவேக்கிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையி, தற்போது நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

இந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது... "அன்பு நண்பர் , சக ஊழியர் கலைமாமணி பத்மஶ்ரீ விவேக் அவர்களது பிரிவு  என்னை அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைய செய்துள்ளது.. 1987ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த " மனதில் உறுதி வேண்டும்" திரைப்படம் மூலம் விவேக் அவர்கள் நடிகராக அறிமுகமானார்.

34 வருடங்களாக மக்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக தனது நகைச்சுவை மூலம் சமூக சிந்தனைகளையும் பகுத்தறிவு சிந்தனைகளையும்  எடுத்துரைத்து  வலம் வந்தவர் இன்று காலமானார் என்பது வேதனைக்குறியது. ஐந்துமுறை தேசிய விருதும் தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை விருது மற்றும் கலைமாமணி சின்னக்கலைவாணர், ஜனங்களின் கலைஞன், "பத்ம ஶ்ரீ" உட்பட பல பட்டங்கள் பெற்ற ஒப்பற்ற கலைஞன் என போற்றப்பட்டவர் விவேக்.  பார்போற்றும் நமது முன்னாள் ஜனாதிபதி அமரர் அப்துல் கலாம் அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பும் நட்பும் வைத்திருந்த ஒரே நடிகர் விவேக்.

திரை வட்டாரத்தில் அனைவருடனும் நட்போடு இருந்த அவர் திரை உலகினர் மனதில் மட்டுமல்ல ரசிகர்களின் மனதிலும் எல்லா அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் இதயத்திலும் இடம் பிடித்து பவனி வந்தவர்.  ‘ஒரு கோடி மரம்’ கன்றுகள் நடும் திட்டம் மூலம் சூழலியல் ஆர்வலராக அறியப்பட்டார்.பலரும் அவரை முன்மாதிரியாக நினைத்து அவரை பின்பற்றி நல்ல செயல் செய்துவந்தனர். 

விவேக் அவர்களின் மறைவு நடிகர் சமூகத்துக்கும் திரை உலகிற்கும்  ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அருமை நண்பரை இழந்து விட்டேன்.விவேக் அவர்களின் குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது துக்கதில் பங்கு கொள்கிறேன்.  நன்றி என நாசர் தெரிவித்துள்ளார்.
 

click me!