விவேக்கின் திடீர் மரணம் சோகத்தில் ஆழ்த்திவிட்டது..! பிரதமர் மோடி இரங்கல்..!

By manimegalai aFirst Published Apr 17, 2021, 12:38 PM IST
Highlights

தமிழ் திரையுலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள முன்னணி காமெடி நடிகரான விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே சுயநினைவை இழந்த அவருக்கு, இதயத்தின் இடதுபுற குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.
 

தமிழ் திரையுலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள முன்னணி காமெடி நடிகரான விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே சுயநினைவை இழந்த அவருக்கு, இதயத்தின் இடதுபுற குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.

உடனடியாக, விவேக்கின் இதய குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை ஆஞ்சியோ செய்து நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 24 மணிநேரம் அவரது உடல் நிலையை கண்காணித்து வரும் நிலை உள்ளதாக SIMS மருத்துவர் ராஜு சிவசாமி தெரிவித்திருந்தார்.

விவேக் விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என, ரசிகர்களும் பிரபலங்களும், நேற்று முதல் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வந்தனர். பலர் அவர் விரைவில் நலம் பெற்று  இன்னும் பல படங்களில் நடிப்பார் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக,  இன்று காலையே ரசிகர்களுக்கும், தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் காத்திருந்தது பேரதிர்ச்சி. இந்த மோசமான தகவலை விவேக்கின் ரசிகர்களும், பிரபலங்களும் சற்றும் எதிரிபார்த்திருக்க மாட்டார்கள்.

நடிகர் விவேக், சிகிச்சை பலன் இன்றி இன்று காலை... 4 :35 மணியளவில் உயிரிழந்தார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியான உடனேயே ரசிகர்களும், பிரபலங்களும் விவேக் வீட்டின் முன் குவிய துவங்கிவிட்டனர். ரசிகர்கள் பலர், சின்ன கலைவாணருக்கு... சமூக இடைவெளியை கடைபிடித்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதே போல் பிரபலங்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கண்ணீரோடு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டர் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்திருந்தனர். அவர்களை தொடர்ந்து தற்போது, பாரத பிரதமர் மோடி... விவேக் மரணத்திற்கு டிவிட்டர் மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: " நடிகர் விவேக்கின் திடீர் மரணம் எனக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் விவேக் என தெரிவித்துள்ளார்.

The untimely demise of noted actor Vivek has left many saddened. His comic timing and intelligent dialogues entertained people. Both in his films and his life, his concern for the environment and society shone through. Condolences to his family, friends and admirers. Om Shanti.

— Narendra Modi (@narendramodi)

click me!