"5 முறை தொழுகை செய்யாவிட்டாலும், என் மதத்தின் மீது பற்றுக்கொண்டவன் நான்"... ஷாரூக்கானின் உருக்கமான பேச்சு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 27, 2020, 5:08 PM IST
Highlights

``நான் தினமும் ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுவதில்லை. ஆனாலும் நான் ஒரு இஸ்லாமியன். நான் இஸ்லாத்தின் கொள்கைகளை நம்புகிறேன். 

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நாட்டின் 71வது குடியரசுத் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் சிஏஏ சட்டம் குறித்து பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான ஆமீர் கான், ஷாரூக்கான் கருத்து தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. ஏன்? இது குறித்து பிரபல நடிகை கங்கனா ரனாவத் கூட பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: மீண்டும் மேடையில் உணர்ச்சிவசப்பட்ட சூர்யா... நா தழுதழுக்க பேசியதால் உருகிய பார்வையாளர்கள்...!

இதனிடையே நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஷாரூக்கான் தனது பிள்ளைகளின் மதம் குறித்து உருக்கமாக பேசிய வீடியா சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது வீட்டில் நாங்கள் எப்போது மதம் குறித்து பேசிக்கொண்டதே கிடையாது. நான் முஸ்லீம், எனது மனைவி ஒரு இந்து, ஆனால் எனது பிள்ளைகள் இந்தியர்கள் என்றார். 

ஒருமுறை எனது மகள் பள்ளி படிவத்தில் என்ன மதம் என்று குறிப்பிட வேண்டி இருந்தது. அப்போது எனது மகள், 'அப்பா நம்ம என்ன மதம்?' என்று கேள்வி கேட்டாள். அதற்கு நான் நாம் இந்தியர்கள், இந்தியன் என எழுது எனக்கூறினேன். 

இதையும் படிங்க: 

``நான் தினமும் ஐந்து முறை தொழுகையில் ஈடுபடுவதில்லை. ஆனாலும் நான் ஒரு இஸ்லாமியன். நான் இஸ்லாத்தின் கொள்கைகளை நம்புகிறேன். அது ஒரு நல்ல மதம் மற்றும் அதில் நல்ல ஒழுக்கம் உள்ளது என்று நான் நம்புகிறேன்"என்றார். அவர் பேச்சை கேட்ட பார்வையாளர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர். 

click me!