மீண்டும் மேடையில் உணர்ச்சிவசப்பட்ட சூர்யா... நா தழுதழுக்க பேசியதால் உருகிய பார்வையாளர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 27, 2020, 04:14 PM IST
மீண்டும் மேடையில் உணர்ச்சிவசப்பட்ட சூர்யா... நா தழுதழுக்க பேசியதால் உருகிய பார்வையாளர்கள்...!

சுருக்கம்

அப்போது  சூர்யாவின் குரல் தழுதழுக்க ஆரம்பித்தது, சிறுவன் துருவனை கட்டியணைத்த படி பேசிய சூர்யா லேசாக கண்கலங்கினார். 

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை தொடங்கப்பட்டதன் 10ம் ஆண்டு விழா நடைபெற்றது. சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, தந்தை சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, மாணவர்கள் குடும்பம், சமூகம், தொழில் ஆகிய மூன்றிற்கு சமமான முக்கியத்துவத்தும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இன்னும் அதிக படங்களில் நடித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தையும் அகரம் மூலம் மாணவர்கள் கல்விக்கு உதவுவேன் என்று தெரிவித்தார்.

பின்னர் அகரம் அறக்கட்டளை நிர்வாகிகளான ஜெயஸ்ரீ, ஞானவேல் ஆகியோரை மேடைக்கு அழைத்து பாராட்டினார். சொந்த மகன் துருவனுக்காக கூட நேரம் ஒதுக்காமல், ஜெயஸ்ரீ அகரம் அறக்கட்டளைக்காக உழைத்துக் கொண்டிருப்பதாக கூறினார். அப்போது  சூர்யாவின் குரல் தழுதழுக்க ஆரம்பித்தது, சிறுவன் துருவனை கட்டியணைத்த படி பேசிய சூர்யா லேசாக கண்கலங்கினார். இந்த சம்பவம் பார்வையாளர்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது.

கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியின் போது மாணவி ஒருவரின் உருக்கமான பேச்சைக் கேட்டு, நடிகர் சூர்யா கதறி அழுதார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் சூர்யாவின் மனிதநேயம் அவரது ரசிகர்களால் பெரிதாக பாராட்டப்பட்டது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?