
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா மீது, தேசிய மனித உரிமை கமிஷனில் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளனர்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, தரமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து, நடித்து... பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் அனுஷ்கா ஷர்மா, நடிப்பை தாண்டி சமீப காலமாக வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் ரசிகர்களால் அறியப்படுத்திறார்.
இவரின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட ‘என்.எச்.19’, ‘ஃபில்லாயூரி’, பாரி’ போன்ற பாலிவுட் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதை தொடர்ந்து தற்போது ஆன்லைனில் ஒளிபரப்பாகி வரும், ‘Pataal Lok’ என்கிற வெப் சீரீஸ் ஒன்றை தயாரித்து வருகிறார்.
இந்த சீரிஸில், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் இருப்பதாக கூறி, அந்த காட்சிகளால் தாங்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாக தேசிய மனித உரிமை கமிஷனில் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த காட்சிகள் பற்றி எழுந்துள்ள புகாருக்கு விரைவில் அனுஷ்கா ஷர்மா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.