Maanaadu: சிம்புவின் ‘மாநாடு’க்கு செம டிமாண்ட்.... ரீமேக் உரிமையை கைப்பாற்ற போட்டா போட்டி

By Ganesh PerumalFirst Published Nov 29, 2021, 2:05 PM IST
Highlights

பொதுவாக தமிழில் ஹிட்டாகும் படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் மாநாடு படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் கடும் போட்டி நிலவி வருகிறதாம். 

சிம்புவின் படங்கள் என்றாலே பிரச்சன்னைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்தது தான், அந்த வகையில் பல சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மத்தியில், கடந்த 25-ந் தேதி வெளியான திரைப்படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.

ரிலீசுக்கு முன்னர் பல்வேறு தடைகளை சந்தித்த இப்படம், அதன் வெற்றியால் தற்போது அவை அனைத்தையும் தவிடுபொடி ஆக்கி உள்ளது. சிம்புவின் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். 

தொடர்ந்து பல்வேறு தோல்விகளை சந்தித்து வந்த சிம்புவுக்கு இப்படத்தின் மூலம் மாஸான கம்பேக் கொடுத்துள்ளார். திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு திரைப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. 4 நாட்களில் மட்டும் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

பொதுவாக தமிழில் ஹிட்டாகும் படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் மாநாடு படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் கடும் போட்டி நிலவி வருகிறதாம். குறிப்பாக இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருதாக தகவல் வெளியாகி உள்ளது.

click me!