விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் Shane Warne

Kanmani P   | Asianet News
Published : Nov 29, 2021, 01:02 PM ISTUpdated : Nov 29, 2021, 02:18 PM IST
விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் Shane Warne

சுருக்கம்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே,இன்று இரு சக்கர வாகன விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் மிகவும் பிடித்தமான கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவர் முதல் ஐ பி எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்தவர். பின்னர் அதே அணியின் கோச்சாகவும் பணிபுரிந்தார்.ஷேன் வார்ன் என்றாலே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சச்சின் டென்டுல்கர் தான் நியாபகத்திற்கு வருவார்.இவர்களின் கிரிக்கெட் போட்டப்போட்டி என்பது இன்றளவும் யூட்யூப் வடிவில் ரசிகர்களை என்டர்டெயின் மென்ட் செய்துதான் வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே, சாலை விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். அவர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, அதிலிருந்து கீழே விழுந்து 15 அடிக்கு சறுக்கிக்கொண்டு சென்றதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் சமீப நாட்களாகவே பெரும் சர்ச்சை புயல் வீசி வருகிறது. டெஸ்ட் அணிக் கேப்டன் டிம் பெய்ன், ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியான புகைப்படத்தை அனுப்பி, பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார். இது பெரும் பிரச்சினையாக மாறியது. இதனைத் தொடர்ந்து கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகினார். இந்நிலையில் ஷேன் வார்னேவின் விபத்து கிரிக்கெட் உலகில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிலம்ப‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம்... அதகளமாக தொடங்கிய அரசன் ஷூட்டிங் - எங்கு தெரியுமா?
கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்