
திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மம்மூட்டி, 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் என 6 மொழிகளில்400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்துள்ளார்
மலையாள சூப்பர் ஸ்டார் என புகழப்படும் இவர் நாயகனாக நடித்து வரும் 'சிபிஐ டைரி குறிப்பு’ தனது 5 வது பாகத்தை தொட்டுள்ளது. கே.மது இயக்கத்தில் துப்பறியும் கதை கொண்ட ‘சிபிஐ டைரி குறிப்பு’ என்ற மலையாளப் படத்தின் முதல் பாகம் 1988ல் வெளியானது. இதன் 2ம் பாகம் ‘ஜாக்ரதா’ 1989ம் ஆண்டும், 3ம் பாகம் ‘சேதுராம அய்யர் சிபிஐ’ 2004ம் ஆண்டும், 4வது பாகம் ‘நேரறியான் சிபிஐ’ 2005ம் ஆண்டும் திரைக்கு வந்தது.
4 பாகங்களிலும் சேதுராம அய்யர் என்ற சிபிஐ அதிகாரி வேடத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தற்போது ‘சிபிஐ டைரி குறிப்பு’ படத்தின் 5ம் பாகம் உருவாகிறது.
வழக்கம் போல் எஸ்.என்.சுவாமி கதை எழுத, கே.மது படத்தை இயக்குகிறார். இந்த படத்திழும் தனது வழக்கமான மம்மூட்டி சேதுராம ஐயர் என்ற சிபிஐ அதிகாரியாகவே நடிக்க உள்ளார்.
CBI5 படத்தின் துவக்கம் குறித்து முந்தைய மம்மூட்டியின் கதாப்பாத்திர மாஸ் டைலாக்குகளை கொண்டு ரசிகர்கள் வீடியோ ஒன்றை உருவாக்கி சமூக வலைதளத்தில் உலாவ விட்டுள்ளனர்.
"
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.