#RadheShyamreleasedate பிரபாஸ் - பூஜா ஹெக்டேவின் ரொமான்ஸ் சீன்களுடன் வெளியான Radhe Shyam ஸ்னீக் பிக் !!

By Kanmani PFirst Published Nov 29, 2021, 1:43 PM IST
Highlights

#RadheShyamreleasedate பாகுபலி பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடித்துள்ள "Radhe Shyam" படத்திலிருந்து ஸ்னீக் பிக்  தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படம் பொங்கல் விருந்தாக அடுத்தாண்டு ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து சமீபத்தில் இதயத்தை தொடும் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பாடலை ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். அதே பொருள் தரும் வரிகள், ஆனால் முற்றிலும் வித்தியாசமான இசையில் உருவாகியுள்ள இதன் இந்தி பதிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதன் Aashiqui Aa Gayi,என்னும் பாடலின் ஸ்னீக் பிக் இன்று வெளியாகியுள்ளது. இதில் பிரபாஸ், பூஜா ஹெக்டேவின் ரொமான்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பொங்கல் விருந்தாக அடுத்தாண்டு ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

 

Get a sneak peek into the first from the . & are coming with , the of the year releasing on Dec 1st.https://t.co/Pnu2c9jZm2

Starring & pic.twitter.com/QTUKmcPwSy

முன்னதாக நடிகர் பிரபாஸின் பிறந்த நாளானன்று ராதே ஷியாமின் டீசர் வெளியிடப்பட்டது.  இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரம் ஆதித்யா குறித்த சிறப்பு டீசராக இது அமைந்தது. 

ராதே ஷியாம் திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த நிலையில், பிரபாஸின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்ட டீசர் அவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. தற்போது வெளியாகியுள்ள ஸ்னீக் பிக்கும் அதே வரவேற்பை பெற்று வருகிறது. 

 

 

click me!