
இந்தியில் இதுவரை யாரும் பார்க்காத பிரம்மாண்ட பட்ஜெட்டில் மகாபாரதம் கதை சினிமாவாக எடுக்கப்பட உள்ளது. அந்தப் படத்தை டங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்க உள்ளார். அதில் திரவுபதியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராம் லீலா, பாஜிரோ மஸ்தானி ஆகிய படங்களில் ராணியாக தீபிகா அசத்தியதால், இந்த படத்திலும் திரவுபதி கேரக்டரில் நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார்களாம்.
மது மந்தனாவுடன் சேர்ந்து மகாபாரதம் படத்தை தயாரிக்க உள்ள தீபிகா, இந்த படம் தனது திரையுலகில் முக்கிய மைல்கல்லாக அமையும் என தெரிவித்துள்ளார். தீபிகா படுகோன் போல மற்ற கதாபாத்திரங்களில் யார் எல்லாம் நடிக்க உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு இந்தி திரையுலகில் ஏற்கெனவே தொற்றிக்கொண்டது.
இந்நிலையில் மகாபாரதம் கதையின் முக்கிய கதாபாத்திரமான கிருஷ்ணர் வேடத்தில், இளம் பெண்களின் கனவு நாயகனான ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கதையை கேட்டுள்ள ஹிருத்திக் ரோஷன் இன்னும் ஓகே சொல்லவில்லையாம். ஒருவேலை அவர் ஓகே சொல்லிவிட்டால், ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இதுவாக தான் இருக்கும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.