அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? குமுறும் 'மாநாடு' தயாரிப்பாளர்!

By manimegalai aFirst Published Nov 22, 2021, 10:43 AM IST
Highlights

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று, தமிழக அரசு பொது சுகாதார திட்டத்தில் திருத்தம் செய்துள்ளதற்கு, 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று, தமிழக அரசு பொது சுகாதார திட்டத்தில் திருத்தம் செய்துள்ளதற்கு, 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் உலக நாடுகளில், மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்த கொரோனா சமீபகாலமாக தமிழகத்தில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஒரே அடியாக கொரோனாவை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளையும், விழிப்புணர்வுகளையும்  ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்: Samantha: சமந்தாவை பிரிந்த வேகத்தில் அடுத்த காதலில் விழுந்துட்டாரா நாக சைதன்யா? ரசிகர்களை குழம்ப வைத்த பதிவு!

 

தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் விதமாக, நாள்தோறும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும், வீடு தேடி தடுப்பூசி, மற்றும் வாரத்திற்கு இரண்டு முறை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தடுப்பு முகாம்களையும் தமிழக அரசு நடத்தி வருகிறது. இதன் பலனாக தற்போது வரை தமிழகத்தில் சுமார் 6 கோடி மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்:  AjithKumar: பிறந்தநாளில் தங்க நிற மாடர்ன் உடையில் ஜொலித்த ஷாலினி அஜித்! கோட் - சூட்டில் கலக்கிய தல! போட்டோஸ்

 

அதேநேரம் நீரிழிவு நோயாளிகள், இதய பிரச்சனை இருப்பவர்கள், மிகவும் வயதானவர்கள், கர்ப்பிணிகள் போன்ற பலர் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே அவர்களுக்கும் மருத்துவர்களின் அறிவுரைப்படி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களை மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அரசாணை ஒன்றை வெளியிட்டது.

மேலும் செய்திகள்:  Aditi Rao: பரவசமூட்டும் லோ நெக் ஜாக்கெட்டில்... பளீச் அழகில் போதையேற்றும் அதிதி ராவ்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

 

அதில் "பள்ளி, கல்லூரிகள், சந்தைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள், பொழுதுபோக்கு இடங்கள், பொது இடங்களில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை சம்பந்தப்பட்ட இடங்களில் இருப்பவர்கள் உறுதி செய்து, மற்றும் உரிமையாளர் இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரியப்படுத்த வேண்டும் என்றும், பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்: Pooja Hegde: உங்க கிளாமருக்கு அளவே இல்லையா? உள்ளாடை மட்டும் அணிந்து... கவர்ச்சியில் அத்து மீறிய பூஜா ஹெக்டே!!

 

மேலும் கொரோனா குறைந்து வருவதால், தளர்வுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தளர்வுகள் அறிவிப்பதே மீண்டும் கொரோனா அதிகரிக்கக் கூடாது என்பதற்காகத்தான், எனவே அதில்அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது. முழுமையாக கொரோனாவை அழிப்பதற்காக இந்த முயற்சி என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது சம்பந்தமான பதிவுக்கு சவுக்கு சேகர் போட்ட பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக, வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, போட்டுள்ள டீவீட்டில் "உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!". என தெரிவித்துள்ளார்.

உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்! https://t.co/UI7l5DpNKQ

— sureshkamatchi (@sureshkamatchi)

 

click me!