Shilpa Shetty | 12 வது திருமண நாளை கொண்டாடும் பாலிவுட் நடிகை ; திருமண புகைப்படத்துடன் கணவருக்கு வாழ்த்து!!

Kanmani P   | Asianet News
Published : Nov 22, 2021, 08:16 AM ISTUpdated : Nov 22, 2021, 09:02 AM IST
Shilpa Shetty | 12 வது திருமண நாளை கொண்டாடும் பாலிவுட் நடிகை ; திருமண புகைப்படத்துடன் கணவருக்கு வாழ்த்து!!

சுருக்கம்

ஷில்பா ஷெட்டி  இன்று 12 வது திருமண நாளை கொண்டாடுகிறார். தனது திருமண புகைப்படங்களுடன் கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி லண்டனை சேர்ந்த ராஜ் குந்த்ராயை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் உரிமையாளர்களில் ஒருவராக ராஜ்குந்த்ரா ஓட்டல்கள், தங்க வர்த்தகம், டெலிவிஷன் நிகழ்ச்சிகள் என பல்வேறு துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறார். இந்த தம்தியனாருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

சமீபத்தில் மும்பையில் ஆபாச செயலி மூலம் மாடல்களை ஆபாசமாக படம் எடுப்பதாக வெளியான குற்றச்சாட்டின் பேரில் ராஜ்குந்த்ராவை சில மாதங்களுக்கு முன்னர்  காவல்துறையினர் கைது செய்தனர். அந்த வழக்கில் தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.  இந்த சம்பவம் தொடர்பாக  ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்த நடிகை ஷெர்லின் சோப்ராவை நிழலுலக தாதாக்களை கொண்டு  மிரட்டியதாக ஷெர்லின் வெளியிட்ட பதிவு ராஜ்குந்தரா தம்பதியினருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கிடையே பண மோசடியில் ஈடுபட்டதாக ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிதின் பராய் என்ற தொழிலதிபர் அளித்த புகார் மனுவில்; கடந்த 2014-ல் எஸ்.எப்.எல். என்ற ஃபிட்னஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்யுமாறு ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா உள்ளிட்டோர் நிதின் பராயிடம்  ரூ. 1.51 கோடி பணம் கேட்டு, பெற்றுள்ளனர். ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிதினுக்கு ஒரு ஜிம் மற்றும் ஸ்பா ஆகியவற்றை புனே அருகே அமைத்துத் தர வேண்டும். ஆனால் இவை நடைபெறாததால் கொடுத்த பணத்தை நிதின் திருப்பிக் கேட்டுள்ளார்.பணத்தை திருப்பி கொடுக்காமல், நிதினை மிரட்டியதாக ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு பல பிரச்சனைகள் தன்னை சுற்றியிருந்தாலும் எப்போதும் சமூக வலைதளத்தில் பிஸியாகவே இருந்து வருகிறார் ஷில்பா. இந்நிலையில் இன்று தனது 12 வது திருமண நாள் குறித்து ஷில்பா  டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவோடு திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!