ChithiraiSevvaanam | ஸ்டண்ட் மாஸ்டர் இயக்கிய சித்திரைச் செவ்வானம்; திரைக்கு அறிமுகமாகும் சாய் பல்லவி தங்கை!!

Kanmani P   | Asianet News
Published : Nov 22, 2021, 07:39 AM ISTUpdated : Nov 22, 2021, 08:30 AM IST
ChithiraiSevvaanam | ஸ்டண்ட் மாஸ்டர் இயக்கிய சித்திரைச் செவ்வானம்; திரைக்கு அறிமுகமாகும் சாய் பல்லவி தங்கை!!

சுருக்கம்

சித்திரை செவ்வானம் படத்தில் நடித்ததன் மூலம் நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் நடிகையாக அறிமுகமாகிறார்.

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சித்திரை செவ்வானம் படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.சமுத்திரகனி கனி  நடிப்பில் உருவாகியுள்ள ‘சித்திரை செவ்வானம்’. படத்தின் கதையை இயக்குனர் விஜய் எழுதியுள்ளார்.

இவர்களுடன் ரீமா கல்லிங்கல், இயக்குனர் சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதோடு சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து,  திரையில் தனது என்ட்ரியை கொடுக்கிறார். இவர் ஏற்கனவே இயக்குனர் விஜயுடன் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.பொள்ளாச்சி பகுதியில் படமாக்கப்பட்ட இந்த படம் அப்பா - மகள் பாசப் பிணைப்பை மையமாக வைத்து உருவாகப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் டிசம்பர் 3-ஆம் தேதி ஜி5 ஓடிடித்தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

இந்த படத்தின் முதல் பார்வையை போஸ்டரை  நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.

 

 

இந்த போஸ்டரை  ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் அருண் விஜய்; இயக்குனராக அறிமுகமாகும் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!