
திரைப்படம் என்பது நடிகர்கள், இயக்குநர்கள், கேமரா, எடிட்டிங், VFX, இசை, டப்பிங் என நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த உழைப்பில் உருவாகும் ஒரு படைப்பு.
ஆனால், தற்போது Artificial Intelligence (AI), filmmaking process-ன் பல கட்டங்களுக்குள் நுழைந்து வருகிறது. குறிப்பாக VFX, de-aging, dubbing, voice generation, pre-visualisation, editing உள்ளிட்ட பணிகளில் AI பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் AI மனிதர்களின் வேலைகளை முழுமையாக எடுத்துக்கொள்ளுமா? என்ற கேள்வியும் சினிமா துறையில் எழுந்துள்ளது.
The Greatest of All Time படத்தில் நடிகர் விஜய்யின் இளமையான தோற்றத்தை உருவாக்க de-aging VFX தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. மேலும், மறைந்த விஜயகாந்தின் காட்சிகளையும் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கங்குவா படத்தில் சூர்யாவின் குரலை பல மொழிகளில் பயன்படுத்த AI technology உதவியதாக தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். இதன் மூலம் ஒரு நடிகர் ஒவ்வொரு மொழிக்கும் முழுமையாக நேரில் dubbing செய்ய வேண்டிய நேரம் குறையக்கூடும்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி (Coolie) படத்தின் flashback காட்சிகளில் இளமையான ரஜினிகாந்தை உருவாக்க digital de-aging பயன்படுத்தப்பட்டதாகவும், குரலை உருவாக்க AI பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.
AI வந்தால், வேலையே முழுமையாக இல்லாமல் போய்விடும் என்று அர்த்தமில்லை. மீண்டும் மீண்டும் செய்யப்படும் ஒரே மாதிரியான பணிகளை AI வேகமாக மாற்றும்.
உதாரணமாக, ஒரு VFX கலைஞர் நூற்றுக்கணக்கான frames-ல் ஒரு நடிகர் அல்லது பொருளை background-லிருந்து தனியாக பிரிப்பது போன்ற repetitive வேலைகளை AI வேகமாகச் செய்ய முடியும். இதனால் VFX கலைஞரின் நேரம் மிச்சமாகும். ஆனால், இறுதி காட்சி சரியாக உள்ளதா? முகபாவனை இயல்பாக இருக்கிறதா? காட்சியின் emotional impact எப்படி இருக்க வேண்டும் என்பதை மனிதர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
ஒரு காட்சியை படமாக்குவதற்கு முன்பே அது எப்படி இருக்கும் என்பதை AI மூலம் சில நிமிடங்களில் visualise செய்ய முடியும். எதிர்காலத்தில் AI vs Human என்பதைக் காட்டிலும் AI + Human என்ற முறை சினிமாவில் அதிகமாகக் காணப்படும் என்று கூறப்படுகிறது.
AI மூலம் ஒரு நடிகரின் முகத்தையும், குரலையும் அப்படியே உருவாக்க முடியும் என்பதால், புதிய சிக்கல்களும் உள்ளன. அந்த நடிகரின் அனுமதி இல்லாமல் அவரது முகம் அல்லது குரலை பயன்படுத்தலாமா? ஒரு நடிகர் இறந்த பிறகு, அவரது முகத்தையும், குரலையும் புதிய திரைப்படத்தில் பயன்படுத்த யாரிடம் அனுமதி பெற வேண்டும்? இதுபோன்ற கேள்விகள் எழுகின்றன.
கடந்த 2025-ல் ‘Raanjhanaa’ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியானபோது, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதாக வெளியான தகவல் சினிமா உலகில் விவாதத்தை ஏற்படுத்தியது. ஒரு திரைப்படம் வெளியான பிறகு, அதன் முக்கியமான காட்சிகளை AI மூலம் மாற்றும்போது, அந்தப் படத்தை உருவாக்கிய இயக்குநர் மற்றும் நடிகர்களின் படைப்பாற்றல் உரிமை மற்றும் அவர்களின் அனுமதி (consent) குறித்து கேள்விகள் எழுகின்றன.
இதனால், AI-ஐ சினிமாவில் பயன்படுத்தும்போது தொழில்நுட்ப வளர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட கலைஞர்களின் உரிமைகளையும், அனுமதியையும் மதிப்பது எவ்வளவு முக்கியம் என்பது தெளிவாகிறது.
AI பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சிறிய பட்ஜெட் filmmakers-க்கும் புதிய வாய்ப்புகளை கொடுக்கிறது. அதாவது, பெரிய set அமைப்பது, crowd உருவாக்குவது, difficult location உருவாக்குவது போன்றவற்றில் AI உதவினால் production cost மற்றும் time குறைய வாய்ப்புள்ளது என ஒரு சர்வேவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பு: இது பொதுவான கருத்து மட்டுமே. எந்த ஒரு குறிப்பிட்ட திரைப்படம், தொழில்நுட்பக் கலைஞர் அல்லது சினிமா துறையினரின் வேலைவாய்ப்பை நேரடியாகக் குறிக்கும் வகையில் கூறப்படவில்லை. திரைப்படத் தயாரிப்பில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் சினிமா பணிகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து இந்தத் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.