veeran : பிரபல இயக்குனருடன் கூட்டணி... ‘வீரன்’ ஆக களமிறங்கும் ஹிப்ஹாப் ஆதி - பூஜையுடன் தொடங்கியது ஷூட்டிங்

Published : May 25, 2022, 04:03 PM IST
veeran : பிரபல இயக்குனருடன் கூட்டணி... ‘வீரன்’ ஆக களமிறங்கும் ஹிப்ஹாப் ஆதி - பூஜையுடன் தொடங்கியது ஷூட்டிங்

சுருக்கம்

veeran : ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாக உள்ள வீரன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

சுயாதீன இசை ஆல்பங்களுக்கு இசை அமைத்ததன் மூலம் பிரபலமான ஹிப்ஹாப் ஆதி, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து தனி ஒருவன், இமைக்கா நொடிகள், இன்று நேற்று நாளை, என பல்வேறு படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த இவர் மீசைய முறுக்கு படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு ரிலீசான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து நடிப்பின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்த ஆதி, அடுத்தடுத்து நட்பே துணை, சிவகுமாரின் சபதம், போன்ற படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அன்பறிவு திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது அவர் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் நடிக்கும் புதிய படத்துக்கு வீரன் என பெயரிடப்பட்டு உள்ளது. மரகத நாணயம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான ஏ.ஆர்.கே.சரவன் இப்படத்தை இயக்க உள்ளார். 

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. ஏற்கனவே ஹிப்ஹாப் ஆதி நடித்த சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களை இந்நிறுவனம் தான் தயாரித்திருந்தது. வீரன் படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி தான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... Vikram dialogue : கமல் பேசிய ஆபாச வசனத்தை போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!