Aishwaryaa Rajinikanth : கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆஃப் போட்டியைக் காண ரஜினியின் மகள் ஐஸ்வர்யா சென்றிருந்தார்.
15-வது ஐபிஎல் தொடர் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றன. இதில் முதல் இரண்டு இடத்தை பிடித்த குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல் குவாலிபயர் போட்டியில் நேற்று மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவு 188 ரன்களை குவித்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, முக்கிய கட்டங்களில் விக்கெட்டுகளை இழந்தாலும், தொய்வின்றி ரன்குவித்து வந்தது. அந்த ஆட்டத்தின் இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை பிரசீத் கிருஷ்ணா வீசினார். அவர் வீசிய முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு விளாசிய குஜராத் அணி வீரர் டேவிட் மில்லர் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் குஜராத் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. இந்தப் போட்டு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியைக் காண நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் சென்றுள்ளார். அவரது மகன்களான யாத்ராவும், லிங்காவும் உடன் சென்றிருந்தனர். அப்போது அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா. இதைப்பார்த்த ரசிகர்கள் யாத்ராவை பார்க்கும் போது தனுஷை பார்ப்பது போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... விஜய் கழட்டிவிட்டதால்... குக் வித் கோமாளி பிரபலத்தை வைத்து பான் இந்தியா படத்தை எடுத்து முடித்த ஏ.ஆர்.முருகதாஸ்