Hip Hop Adhi : பிரபல நடிகர் ஹிப் ஹாப் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படம் குறித்த தகவல் இப்பொது வெளியாகியுள்ளது.
திரைத்துறையில் தனக்கான வாய்ப்பை தேடி பயணித்து இன்று மிகப்பெரிய இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் விளங்கி வரும் ஒருவர் தான் ஹிப் ஹாப் ஆதிய அவர்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "மீசைய முறுக்கு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமா உலகத்தில் இவர் அறிமுகமானார்.
ஆனால் அதற்கு முன்பே இவர் இசையமைப்பாளராக பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக படங்களை இயக்கி வந்த ஆதி அவர்கள், அண்மையில் திரைத்துறையில் இருந்து சற்று ஓய்வு பெற்று, தன்னுடைய டாக்டரேட் பணிகளில் ஈடுபட்டிருந்தார். தற்பொழுது அதற்கான பட்டமும் அவர் பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே.
undefined
இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் உருவான வீரன் திரைப்படத்தில் நடித்திருந்த ஆதி, தற்பொழுது இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள "PT சார்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தற்பொழுது அந்த திரைப்பட படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளது என்றும், விரைவில் அந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Team wishing our hero a happy birthday 🎉
With this shooting gets wrapped up !!
Dir by
Prod by Dr … pic.twitter.com/dGcIU3rLzW
வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வரும் நிலையில், பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் மூலம் புகழ்பெற்ற கார்த்திக் வேணுகோபாலன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
Anjali Menon: KRG ஸ்டுடியோஸுடன் இணைந்து... தமிழில் கால் பதிக்கும் இயக்குனர் அஞ்சலி மேனன்!