“இந்து கடவுள் என்றால் அவ்வளவு இளக்காரமா?”... மூக்குத்தி அம்மன் படக்குழுவிற்கு ஆப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Nov 20, 2020, 7:13 PM IST
Highlights

இதனிடையே இந்து தமிழர்‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் இந்துமத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதாகவும், இந்து மத சாமியார்களை வில்லன்கள் போல் படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்ஜே பாலாஜி - என்.ஜே.சரவணன் ஆகியோரது கூட்டு இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்த படத்தில் ஊர்வசி, மெளலி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் முதன் முறையாக அம்மன் கெட்டப்பில் நயன்தாரா நடித்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

இதையும்  படிங்க: விஜய் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகை திடீர் மாற்றம்... குழப்பத்தில் ரசிகர்கள்...!

மதத்தை வைத்து போலி சாமியர்கள் செய்யும் காரியங்களை தோலூரித்து காட்டும் விதமாக வெளியானது. ஆனால் இதில் இந்து மதத்தை மட்டுமே விமர்சித்திருந்ததாகவும், கிறிஸ்துவ மதம் குறித்து விமர்சிக்கும் காட்சிகள் நீக்கப்பட்டது பெரும் விமர்சனத்தை உருவாக்கியது. இதனிடையே இந்து தமிழர்‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் இந்துமத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதாகவும், இந்து மத சாமியார்களை வில்லன்கள் போல் படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க:  கிழிந்த பேண்டில் பாலைவனத்தில் இப்படியொரு போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்... அய்யய்யோ என அலறும் நெட்டிசன்கள்!

இதனால் இந்து கடவுள் குறித்து அவதூறாக படமெடுத்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும். அந்தப் படத்தின் தயாரிப்பாளரை திருப்பதி தேவஸ்தான ஆலோசனை கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். படக்குழுவினர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நிஜக்கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையிலான மோதலை நகைச்சுவையுடன் படம் வர்ணித்திருந்தாலும் இந்து மதம் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது பலரும் வருத்தப்பட வைத்துள்ளது. 
 

click me!