"சிகிச்சை ஏற்கனவே தொடங்கிவிட்டது. புற்றுநோயில் இருந்து விடுபட்டு இன்னும் வலுவாக வருவேன்" என ஹினா கான் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் பாலிவுட் நடிகையும் ஹினா கான், தனது தலைமுடியை குட்டையாக வெட்டிக் கொள்ளும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில், ஹினா கானின் முடி வெட்டப்படும் போது அவரது தாய் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் குமுறி அழும் சத்தம் கேட்கிறது. பின்னர், ஹினா கான் தனது தாயை, இது வெறும் முடிதான் என்று கூறி ஆறுதல்படுத்துவதையும் வீடியோவில் காண முடிகிறது.
ஆனால், ஹினா கானின் ஆறுதல் வார்த்தைகளில் சமாதானம் அடையாத அவரது தாயார் தொடர்ந்து அழுகிறார். ஹினா கான் தன் தாயிடம், "போதும். இப்படி அழுவது உங்கள் உடலுக்கு நல்லதில்லை" என்று சொல்லும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
கமல் வாங்கிய காஸ்ட்லி சொத்துகள்! மேன்ஷன் முதல் கார் வரை... எல்லாமே உலகத்தரம்!
இன்ஸ்டாகிராமில் ஹினா கான் வெளியிட்ட இந்த குட்டி வீடியோவின் முடிவில், "நான் விடுதலை பெற்றது போல உணர்கிறேன்" என்றும் ஹினா கான் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஹினா கான் இன்ஸ்டாகிராமில் தனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்திருப்பதாகக் கூறினார்.
"நான் நன்றாக இருக்கிறேன் என்று அனைவருக்கும் உறுதியாகக் கூற விரும்புகிறேன். நான் வலிமையாகவும், உறுதியாகவும், இந்த நோயைக் கடக்க முழுமையாகத் தயாராக இருக்கிறேன்" என்று ஹினா கான் தெரிவித்துள்ளார். "சிகிச்சை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதிலிருந்து விடுபட்டு இன்னும் வலுவாக வருவேன்" என அவர் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
ஹினா கானின் ரசிகர்கள் கண்ணீர் சிந்திய அவரது அம்மாவுக்கு ஆறுதலான கருத்துகளை கமெண்ட் செய்து வருகிறார்கள். ஹினா புற்றுநோயை வென்று மீண்டும் வெற்றிகரமாக வலம் வருவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
இந்தியாவின் முதல் சி.என்.ஜி. பைக் Freedom 125! நாளை அறிமுகம் செய்கிறது பஜாஜ் நிறுவனம்!