ஓய்வு ஓவர்.. ஹைதராபாத் பறந்த சூப்பர் ஸ்டார்.. கூட சென்ற மெகா ஹிட் நடிகர்.. யார் அவர்? "தலைவருடன்" சென்றது ஏன்?

Ansgar R |  
Published : Jul 04, 2024, 04:31 PM IST
ஓய்வு ஓவர்.. ஹைதராபாத் பறந்த சூப்பர் ஸ்டார்.. கூட சென்ற மெகா ஹிட் நடிகர்.. யார் அவர்? "தலைவருடன்" சென்றது ஏன்?

சுருக்கம்

Super Star Rajinikanth Coolie : லோகேஷ் கனகராஜ் இயக்கம் கூலி பட பணிகளை தொடர்வதற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டுள்ளார் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய் வசூல் செய்து, மெகா ஹிட் திரைப்படமாக மாறியது ஜெயிலர். அந்த மெகா ஹிட் திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்த நிலையில், விரைவில் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து அவர் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 170வது திரைப்படமான "வேட்டையன்" திரைப்படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே அப்பட பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், தனது அடுத்த பட பணிகளை நாளை முதல் துவங்குகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

கோட் சூட் அணிந்து மகன் மற்றும் மகள்களுடன் ஜம்முனு போட்டோஷூட் நடத்திய விஜயகுமார் - வைரலாகும் போட்டோஸ்

"ஜெய் பீம்" திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், உருவாகியுள்ள "வேட்டையன்" திரைப்பட பணிகளை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதன் பிறகு இமயமலைக்கும், அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்கும் சென்று ஓய்வெடுத்தார். சுமார் இரண்டு மாத கால ஓய்வு முடிந்துள்ள நிலையில், இன்று ஜூலை மாதம் 4ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் "கூலி" திரைப்பட பணிகளை துவங்க ஹைதராபாத்திற்கு சென்றிருக்கிறார். 

அங்கு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இப்பட பணிகள் துவங்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிரபல மலையாள திரையுலக நடிகர் மோகன் பாபு அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில் சென்றுள்ளார். 

இவர்கள் இருவரும் மிக மிக நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மோகன் பாபு அவர்கள் கடந்த 1974ம் ஆண்டு முதல், 50 ஆண்டுகளாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகின்றார். இறுதியாக தமிழில் சூர்யாவின் "சூரரை போற்று" படத்தில் அவர் நடித்திருந்தார். சென்னைக்கு வரலட்சுமியின் திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த அவர், அதை முடித்துக் கொண்டு ஹைதராபாத் புறப்பட்டுள்ளார்.அப்போது ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

'கல்வி விருது விழா' முடிந்த பின்னர்... யாரும் எதிர்பாராததை செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?