ரூ.12 லட்சம் மதிப்பு தங்க நெக்சலசை ஆட்டைய போட்ட பிரபல நடிகை! நகைக்கடை ஊழியர்கள் அதிர்ச்சி!

First Published Jul 20, 2018, 1:28 PM IST
Highlights
Hina Khan Accused of Rs 12 Lakh Jewellery Fraud


பாலிவுட் நடிகை ஹினா கான், ஸ்பான்சராக கிடைத்த தங்க நகையை திருப்பி தராததால், வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகை ஹினா கான் பிக் பாஸ் 11 சீசன் மூலமாக பிரபலமானவர். பல்வேறு இந்தி சினிமா மற்றும் டிவி சீரியல்களிலும் நடித்துள்ள ஹினா கான், தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் சமீபத்தில் நடைபெற்ற தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்டைலான தங்க நெக்லஸ் அணிந்து பங்கேற்றார். விருது வழங்கும் நிகழ்ச்சி முடிந்து பல வாரங்கள் கடந்த நிலையில், இதுவரை அந்த நெக்லசை ஹினா கான், சம்பந்தப்பட்ட ஸ்பான்சரிடம் திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து, ஸ்பான்சர் தரப்பில் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. அதில், ஹினா கானின் அஜாக்கிரதை காரணமாக, எங்களுக்கு ரூ.11 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நெக்லசை திருப்பி திரும்படி பல முறை கேட்டோம். ஆனால், திருப்பி தர மறுத்துவிட்டதோடு, தொந்தரவு செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று ஹினா கான் எங்களுக்கு மிரட்டல் விடுத்தார். இதையடுத்தே அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தோம். குறிப்பிட்ட நகையையோ அல்லது அந்த நகைக்குரிய மதிப்பு தொகையை ஹினா கான் திருப்பி தர வேண்டும். மேலும், தேவையற்ற தொல்லை தந்ததற்காக, ஹினா கான் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கேட்பதோடு, ரூ.2 லட்சம் கூடுதல் இழப்பீடு தர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் உடனடியாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ஹினா கான், ‘’இந்த வக்கீல் நோட்டீஸ் இதுவரை எனது வீட்டுக்கு வரவில்லை. ஆனால், அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்பது தெரியவில்லை. இதை நினைத்தால் சிரிப்பாக உள்ளது.

இது எனது எதிரிகளின் திட்டமிட்ட வதந்தி பரப்பும் செயலாகும். இதனால் எனது தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராது,’’எனக் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் வக்கீல் நோட்டீஸ் வந்ததா அல்லது அதனை ஹினா கான் மூடி மறைக்கிறாரா என்பது தெரியாமல் பாலிவுட் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

click me!