
ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய ஐகோர்ட் தடை விதித்துள்ளது. முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஓணம் விடுமுறைக்குப் பிறகு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ம் தேதி இரவு பானர்ஜி சாலையில் உள்ள ஒரு பாரில் லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை காரில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக வீடியோ வெளியானது.
இதனையடுத்து கடத்தப்பட்ட ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனனுடன் இருந்த அனீஷ், மிதுன், சோனாமோள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடத்தல், அடித்து சித்ரவதை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்ததை அடுத்து தலைமறைவானார்.
இந்நிலையில் லட்சுமி மேனன் முன் ஜாமீன் கேட்டு கேரளா ஐகோர்ட்டை அணுகினார். இதனையடுத்து ஐ.டி.ஊழியரை தாக்கிய புகாரில் நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய செப்டம்பர் 17ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நடிகை லட்சுமி மேனன் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, ஜிகர்தண்டா, மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.