கடவுளை முட்டாளாக்க முடியாது – ரவி மோகனுக்கு தரமான பதிலடி கொடுத்த ஆர்த்தி

Published : Aug 26, 2025, 11:58 PM ISTUpdated : Aug 27, 2025, 12:02 AM IST
jayam ravi

சுருக்கம்

Aarti Replied to Ravi Mohan Open Statement : தனது ஆர் எம் ஸ்டூடியோஸ் தொடக்க விழாவில் பேசிய ரவி மோகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் தரமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Aarti Replied to Ravi Mohan Open Statement : ரவி மோகன் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். ஜெயம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான ரவி மோகன் இன்று பராசக்தி, தனி ஒருவன் 2, ஜெனீ மற்றும் கராத்தே பாபு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். என்னதான் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல கசப்பான சம்பவங்களை எதிர்கொண்டு வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டு ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் இருவரும் ஒன்றாக சுற்றி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதுமட்டுமின்றி ரவி மோகனின் விவாகரத்திற்கு முக்கிய காரணமே கெனிஷா தான் என்றெல்லாம் செய்தி வெளியானது.

இந்த சூழலில் தான் இன்று நடைபெற்ற ஆர் எம் ஸ்டூடியோஸ் தொடக்க விழாவில் கெனிஷாவைப் பற்றி உணர்ச்சிப்பூவர்மாக பேசி தனது வளர்ச்சியில் முக்கிய பங்கு அவர் தான் என்றும், அவர் கடவுள் அனுப்பி வைத்த கிஃப்ட் என்றும் பேசி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ரவி மோகன் தனது பெயரில் ஸ்டூடியோஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். அதன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிவகார்த்திகேயன், கார்த்தி, ஷிவராஜ் குமார், ஜெனீலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், எஸ் ஜே சூர்யா என்று ஏராளமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், ரவி மோகனின் சகோதரர் மோகன் ராஜா மட்டுமின்றி ரவி மோகனின் அம்மாவும் கலந்து கொண்டார். இந்த நிலையில் தான் இந்த விழாவில் தான் 2 படங்களை தயாரிக்க இருப்பதாகவும், அதில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவித்தார். மேலும், அவரது காதலியான கெனிஷா பிரான்சிஸ் பற்றியும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அதில், கெனிதா தான் தனக்கு கடவுள் கொடுத்த பரிசு. ஒரு கட்டத்தில் அப்படியே ஸ்டக்காகி நிற்கும் போது கடவுள் பொருளாகவோ, வாகனமாகவோ ஏதாவது ஒன்றை அனுப்பி வைப்பார். ஆனால், எனக்கு அவர் கொடுத்த பரிசு தான் கென்.

அவர் மட்டும் இல்லை என்றால் இந்த இடத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறாது. என்னுடைய சொத்து எல்லாவற்றையும் முடக்கியதாக சொன்னாங்க. ஆனால், உண்மையில் உண்மையான சொத்து என்றால் அது நீங்கள் தான். உங்களுடைய உண்மையான அன்பை நான் சம்பாதிச்சிருக்கிறேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.

இந்த நிலையில் தான் கென் தனக்கு கடவுள் கொடுத்த கிஃப்ட் என்றும் தான் வாழக் கூடாது என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் தான் இங்கு தான் இருப்பேன் என்றும் ரவி மோகன் கூறியதற்கு ஆர்த்தி தரமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கடவுளை முட்டாளாக்க முடியாது என்று ஒரே வரியில் பதில் அளித்து ஷாக் கொடுத்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!
மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!