விஷாலின் அதகள அப்டேட்... ட்ரிபிள் ட்ரீட்டாக வெளிவந்த மகுடம் பர்ஸ்ட் லுக்..!

Published : Aug 27, 2025, 02:21 PM IST
Magudam

சுருக்கம்

ரவி அரசு இயக்கத்தில் விஷால், துஷாரா விஜயன் நடித்த மகுடம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகி உள்ளது.

Magudam First Look : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது 'மகுடம்' என்கிற திரைப்படம் தயாராகி வரும் நிலையில், அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் விஷால் வயதான தோற்றம் உட்பட மூன்று தோற்றங்களில் நிற்கும் போஸ்டரை விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களுடன் படக்குழு வெளியிட்டது. துறைமுக பின்னணியில் விஷால் திரும்பி நிற்பது போல் சமீபத்தில் வெளியான இதன் டைட்டில் டீசர் மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருந்த நிலையில், தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படத்தின் மீது மேலும் ஹைப் ஏற்றி உள்ளனர்.

மகுடம் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

விஷால் முழு உடல்நலத்துடன் திரும்பி ஃபார்முக்கு வந்துள்ளதற்கு சான்றாகவே இந்த பர்ஸ்ட் லுக்கும், டைட்டில் டீசரும் உள்ளன. விஷாலின் அதிரடி பொழுதுபோக்கு படமாக 'மகுடம்' இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99-வது படமும், விஷால் நடிக்கும் 35-வது படமும் இதுவாகும். ரவி அரசு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். 'மகுடம்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, பாலக்காடு ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

 

2023 ஆம் ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி படத்திற்குப் பிறகு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் விஷால் படம் 'மகுடம்'. மகுடம் என்றால் கிரீடம் என்று பொருள். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். விஷாலின் வெற்றி படங்களான சமர், நான் சிகப்பு மனிதன், கத்தி சண்டை, மதகஜ ராஜா ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன் 'மகுடம்' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் வெளியானது. சுந்தர் சி இயக்கிய இப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. சுமார் 12 ஆண்டுகள் காத்திருந்து ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படம் என்றால் அது மதகஜராஜா தான். அதன் பின்னர் அவர் நடிக்கும் படம் மகுடம். இப்படமும் விஷாலின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!
2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்தியப் படங்கள் - லிஸ்ட்டில் ஒரே ஒரு தமிழ் படமும் இருக்கு..!