ஆபாச விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Nov 12, 2020, 2:17 PM IST
Highlights

ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சனைகள் தொடர்பான மருந்துகள் போன்றவற்றிற்கான விளம்பரங்கள் மிகவும் ஆபாசமாகவும்,  வளர் இளம் பருவத்தினரை தூண்டும் விதமாகவும் அமைவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள் மட்டுமின்றி உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் போன்றவற்றுக்கும் தேவையற்ற வகையில் பெண்களை ஆபாசமாக காண்பித்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. 

 

இதையும் படிங்க: அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா... உடலை இறுக்கி பிடித்திருக்கும் உடையில் உச்சகட்ட கவர்ச்சி...!!

ஆகவே விளம்பரங்களை தணிக்கைக்கு உட்படுத்தவும், மீறும் ஊடகங்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை அது போன்ற விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இதையும் படிங்க: அடி ஆத்தி ‘சூப்பர் சிங்கர்’ ராஜலட்சுமியா இது?.... மெல்லிய புடவையில் மெருகேறி ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு, ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்ப மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

click me!