ஹரிஷ் கல்யாணின் பிக் பட்ஜெட் படமான ‘டீசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வீடியோவுடன் அறிவித்த படக்குழு!

By manimegalai a  |  First Published Nov 11, 2023, 7:31 PM IST

நடிகர் ஹரீஷ் கல்யாண் இயக்குனர் சண்முகம்  முத்துசாமி இயக்கத்தில் நடித்து வந்த 'டீசல்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
 


தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் சார்பில் எம். தேவராஜுலு தயாரித்து, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹரிஷ் கல்யாணின் ’டீசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தீபாவளி வாழ்த்துக்களுடன் படப்பிடிப்பின் போது ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்பைக் காட்டும் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 75+ இடங்களில் 5000+ ஆட்களைக் கொண்டு 100 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ஹரிஷ் கல்யாணின் கேரியர் கிராஃப் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் அதே வேளையில், வர்த்தக வட்டாரத்திலும் அவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், ஹரிஷ் கல்யாணின் கேரியரில் முதன்முறையாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்தே ’டீசல்’ திரைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சிறப்பு வீடியோ முழு குழுவினரின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உள்ளது. ஆடியோ, டிரெய்லர் மற்றும் டீசர் வெளியீட்டு அறிவிப்புகளுடன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் தெரிவிக்கும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

’டீசல்’ படத்தில் இருந்து வெளியான ‘பீர் சாங்’ பாடல் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் வசீகரிக்கும் டியூன்கள் மற்றும் பாடல்களால் பலதரப்பினரின் ஆர்வத்தையும் கவர்ந்தது. ’டீசல்’ படத்தில் அதுல்யா ரவி, பி. சாய்குமார், எஸ் கருணாஸ், வினய் ராய், அன்னயா, ஜாகீர் உசேன், சச்சின் கெடேகர், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா, என், தீனா (தினேஷ்), தங்கதுரை கே, லட்சுமி சங்கர், எஸ். தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், பிரேம் குமார். எஸ், போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!