இளையராஜாவை கௌரவித்த கேரளா அரசு … சபரிமலை சன்னிதானத்தில் ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

Selvanayagam P   | others
Published : Jan 15, 2020, 06:19 PM ISTUpdated : Jan 19, 2020, 04:15 PM IST
இளையராஜாவை கௌரவித்த கேரளா அரசு … சபரிமலை சன்னிதானத்தில்  ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

சுருக்கம்

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. 2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இன்று சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது. 

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. 2020-க்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. இன்று சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது. 

இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த 2019-க்கான ஹரிவராசனம் விருது பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. 

இதே நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. ஹரிவராசனம் விருது பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஏசுதாஸ், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா கடந்த 1970-ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஒரிசா எனப் பல இந்திய பிராந்திய மொழிகளிலும் 1௦௦௦க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வெளியாக இருக்கும் ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்துள்ளார். அந்தப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் வெளியாகி, இசை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ஐந்து முறை தேசிய விருதும், மூன்று சர்வதேச விருதுகளும், ஆறு தமிழ்நாடு அரசு விருதுகளும் உட்பட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

அது மட்டுமல்லாது மத்திய அரசின் ‘பத்ம பூஷன், பத்ம விபூஷன்’, மாநில அரசின் ‘கலைமாமணி’ பட்டத்தையும் பெற்றுள்ளார். ஏற்கனவே கேரள அரசு 2016-ஆம் ஆண்டு இளையராஜாவிற்கு கலைக்கு தொண்டு ஆற்றியவர்களுக்கு வழங்கும் ‘நிஷாகாந்தி புரஸ்காரம்’ என்ற விருதை வழங்கி கௌரவித்து இருந்தது. தற்போது ‘ஹரிவராசனம்’ விருது இளையராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!