உஷ்ஷ்... சத்தமே வரக்கூடாது... வாயில் விரல் வைத்து மிரட்டும் விஜய்... தாறுமாறு வைரலாகும் "மாஸ்டர்" செகண்ட் லுக்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 15, 2020, 6:02 PM IST
Highlights

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்த படி பொங்கல் விருந்தாக மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தில் தற்போது விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். விரைவில் விஜய் – விஜய் சேதுபதி இருவரின் காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்த படி பொங்கல் விருந்தாக மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பர்ஸ்ட் லுக்கைப் போலவே விஜய் மட்டுமே இருக்கும் இந்த போஸ்டரும் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது. 

கண்ணில் ஸ்டைலாக கூலிங்கிளாஸ் அணிந்திருக்கும் விஜய், வாய் மேல் விரல் வைத்து சத்தமே வரக்கூடாது என்பது போல், மிரட்டும் தொனியில் நிற்கும் செகண்ட் லுக் போஸ்டரை தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். 

மேலும் #MasterSecondLook என்ற ஹேஷ்டேக், போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலேயே இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை உலக அளவில் ட்ரெண்ட் செய்யும் முயற்சியில் தளபதி ரசிகர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். 

click me!