அச்சு அசலாக அம்மா தேவதர்ஷினி போலவே இருக்கும் மகள்... சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜாலி டூர் போட்டோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 15, 2020, 05:00 PM IST
அச்சு அசலாக அம்மா தேவதர்ஷினி போலவே இருக்கும் மகள்... சோசியல் மீடியாவில் வைரலாகும் ஜாலி டூர் போட்டோ...!

சுருக்கம்

சற்று வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியுள்ள நியத்தி, அப்படியே அச்சு, அசலாக தேவதர்ஷினி போலவே இருக்கிறார். 

டி.வி. தொகுப்பாளினி, சீரியல் நடிகை என  படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் தேவதர்ஷினி. அதிலும் ''மர்மதேசம்'' தொடர் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதையடுத்து ''பார்த்திபன் கனவு'' படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.  'சின்ன பாப்பா பெரிய பாப்பா' நகைச்சுவைத் தொடரில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய நடிகையானார். தேவதர்ஷினி என்றாலே கலகலப்பான பாத்திரமாக ரசிகர்களின் மனதில் பதிந்து போனது. 

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான ''காஞ்சனா'' திரைப்படத்தில் கோவை சரளாவோடு தேவதர்ஷினி இணைந்து செய்த  காமெடி செம்ம வொர்க்-அவுட் ஆனது. அதன் பின்னர் ''காஞ்சனா - 2''விலும் பட்டையைக் கிளப்பினர். இப்போது அக்கா, அண்ணி கேரக்டர் என்றாலே கூப்பிடு தேவதர்ஷினியை எனும் அளவிற்கு திரையுலகில் பெயர் எடுத்துவிட்டார். 

இவரது மகள் நித்யா, சமீபத்தில் வெளியான '96' படத்தில் இவரது சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரே படத்தில் அம்மாவை விட அதிக புகழ் பெற்ற நியத்தி, பெற்றோருடன் டூர் சென்றுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சற்று வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியுள்ள நியத்தி, அப்படியே அச்சு, அசலாக தேவதர்ஷினி போலவே இருக்கிறார். 

பார்ப்பதற்கு மகள் போல் இல்லாமல், தேவதர்ஷினியின் இரட்டை சகோதரி போல் இருக்கிறார். அக்கா, தங்கை போல் இருக்கும் அம்மா, மகளின் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?