'நாச்சியார்' கொடுத்த நம்பிக்கை... அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன் நெகிழ்ச்சியில் - ஜி.வி.பிரகாஷ்..!

 
Published : Feb 20, 2018, 12:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
'நாச்சியார்' கொடுத்த நம்பிக்கை... அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன் நெகிழ்ச்சியில் - ஜி.வி.பிரகாஷ்..!

சுருக்கம்

gv prakash said the natchiyar movie success

கடந்த வெள்ளியன்று இயக்குனர் பாலா இயக்கத்தில், ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வெள்ளியன திரைப்படம் 'நாச்சியார்' இந்த படம் வெளியான நாள் முதல் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

ஜி.வியின் நன்றி:

திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தாலும் இந்த திரைப்படம் தான் அவருக்கு சிறந்த நாயகன் என்கிற அந்தஸ்து மற்றும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துள்ளது. இதனால் இந்த படத்திற்கு தன்னை தேர்தெடுத்த இயக்குனர் பாலாவிற்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்....
 
நாச்சியார் திரைப்படம் விமர்சகர்களிடமும், மக்களிடமும், திரையுலக பிரமுகர்களிடம் எனக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ளது. 

எப்போதுமே பாலா சார் படத்தில் நடிப்பது என்பது பல நடிகர்களின் கனவு. 'நாச்சியார்' படத்துக்காக என்னை அணுகிய போது கூட, இசையமைக்கத் தான் அழைக்கிறார் என்று தான் நினைத்தேன். 'நீ தான் நடிக்கிற' என்ற பாலா சார் சொன்ன போது, நான் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் எழுதிவிட முடியாது. 

'நாச்சியார்' படத்தில் என் நடிப்பைப் பார்த்து அனைவருமே 'நல்ல நடிகன்' என்று தெரிவித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் பாலா சார் மட்டுமே. அவர் காட்சியை எப்படி உள்வாங்கி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். என் நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பாலா சார். அவருக்கு என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

இதில் என்னுடன் நடித்த ஜோதிகா மேடம், இவானா ஆகியோருக்கும் நன்றி. 

இளையராஜா சாருடைய இசையில் நடித்தது, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என ஒவ்வொன்றுமே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. 

'நாச்சியார்' படத்தில் நடித்த அனைவருக்குமே திரையுலகில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் பாலா சார். ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பிற்குச் செல்லும் போது மாணவர்களிடையே ஒரு புதிய உத்வேகம் கலந்த சந்தோஷம் இருக்கும். அதே சந்தோஷத்துடன் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறேன். 'நாச்சியார்' படம் கொடுத்த நம்பிக்கையில் என் நடிப்பு பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன். 

உங்கள் வாழ்த்துகளும் அரவணைப்பும் என்றும் எங்களுக்கு வேண்டும் என்று குரிப்பிடுட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!