
ரோபோ சங்கர்
ரோபோ சங்கர் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர் பட்டியலில் வந்து விட்டார்.அவர் திரையில் வந்தாலே விசில் சத்தம் பறக்கிறது.இவர் செய்யும் காமெடிக்கு மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
ரோபோ
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பரவலாக அறியப்பட்டவர்.அந்த தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் ரோபோ போன்று நடித்ததால் அந்த பெயரே அவருக்கு அடைமொழியானது.
கலகலப்பு2
தற்போது இவர் நடிப்பில் வெளியான கலகலப்பு2 நல்ல வெற்றி பெற்றது.இவருடைய காமெடி சீன்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மெர்சல் விஜய்
இந்நிலையில் இளையதளபதி விஜய்க்கு பிரபல பத்திரிக்கை ஒன்று சிறந்த நடிகருக்கான விருதை வழங்கி கௌரவித்தது.
இளைய தளபதி விஜயை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் மெர்சல்.
சிறந்த நடிகர்
இந்த படத்தில் சிறப்பாக நடித்தற்காக சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது நம் ரோபோ சங்கர்தான்.
சதீஷ்
ரோபோ சங்கர் விஜய் விருது வாங்கும் போது மேடையிலேயே வாய் திறந்து என்ன சார் எப்போதும் சதிஷ் தான் உங்கள் படத்தில் காமெடியனாக நடிக்கிறார்.
என்னை எல்லாம் எப்போது சார் நடிக்க வைப்பீங்க என்று கேட்டு விஜய்யை திக்குமுக்காட செய்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.