
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் தயாராகி உள்ளது. மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயன் உடன் அதிதி ஷங்கர், சுனில், சரிதா, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இப்படத்திற்கான பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள திரைப்படம் தான் எஸ்.கே.21. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இருவரும் ஜோடி சேர்ந்து நடிப்பது இதுவே முதன்முறை. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்... Watch : மின்சார ரெயிலில் அட்டி போட்டு ஆதிபுருஷ் பட பாடலை பாடிய இளைஞர்கள் - வைரலாகும் வீடியோ
இந்நிலையில், எஸ்.கே.21 படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க உள்ளார் என அறிவித்துள்ளனர். வழக்கமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பார். தற்போது அவர் கைவசம் டஜன் கணக்கிலான படங்கள் உள்ளதால், அவருக்கு பதில் இப்படத்திற்கு இசையமைக்க ஜிவி பிரகாஷை கமிட் செய்துள்ளனர். அவர் சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள எஸ்.கே.21 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த உள்ளார்கள். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடிக்க உள்ளாராம். இப்படத்திற்காக அவர் பிரத்யேக பயிற்சி எடுத்து நடிக்க உள்ளாராம். இதன் காரணமாக அவர் டுவிட்டரில் இருந்து சிறிது காலம் விலகுவதாக அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தங்கலான் படப்பிடிப்பில் விபத்து... நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிந்தது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.