
சென்னை ரோகினி திரையரங்கில் இன்று காலை பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருள் ஆகி உள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தியதை அடுத்து இந்த விவாகரம் குறித்து பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் இதுகுறித்து தனது அதிருப்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது.” என ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படியுங்கள்... தீண்டாமை-லாம் இல்லைங்க.. நரிக்குறவர் குடும்பத்தை அனுமதிக்காதது ஏன்? பதறியடித்து விளக்கம் தந்த ரோகினி தியேட்டர்
இந்த விவகாரம் பூதாகரம் ஆனதை அடுத்து அதுகுறித்து ரோகினி தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்து அறிக்கையும் வெளியிட்டது. அதில் இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாலும் அந்த நரிக்குறவர் குடும்பம் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அழைத்து வந்திருந்ததாலும் அவர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்ததாக புது விளக்கம் ஒன்றையும் கொடுத்திருந்தது.
ரோகினி நிர்வாகத்தில் இந்த விளக்கத்தை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். தான் ஏ சான்றிதழ் பெற்ற படத்துக்கு எனது 14 வயது தம்பியை அழைத்து வந்தபோதெல்லாம் நீங்கள் இப்படி தடுத்து நிறுத்தவில்லையே என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். ரோகினி நிர்வாகத்தின் இந்த விளக்கம் ஒரு மழுப்பும் செயல் என்றும் நெட்டிசன்கல் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Pathu Thala Review : ஏஜிஆர்-ஆக அதகளப்படுத்தி... ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாரா சிம்பு? - பத்து தல விமர்சனம் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.