தியேட்டரில் தீண்டாமை கொடுமை... டிக்கெட் எடுத்து பத்து தல படம் பார்க்க வந்த பெண்ணை துரத்திய ஊழியர்கள் - வீடியோ

Published : Mar 30, 2023, 11:39 AM ISTUpdated : Mar 30, 2023, 11:41 AM IST
தியேட்டரில் தீண்டாமை கொடுமை... டிக்கெட் எடுத்து பத்து தல படம் பார்க்க வந்த பெண்ணை துரத்திய ஊழியர்கள் - வீடியோ

சுருக்கம்

சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் டிக்கெட் எடுத்த மூவரை படம் பார்க்க அனுமதிக்காமல் ஊழியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதையொட்டு இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 8 மணிக்கு தான் திரையிடப்பட்டது. படம் பார்க்க அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் சிம்புவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதையடுத்து காலை 8 மணிக்கு பத்து தல படத்தின் FDFS திரையிடப்பட்டது. இதைப்பார்க்க பெண்களும் அதிகளவில் வந்திருந்தனர்.

அந்த வகையில் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மூன்று பேரை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இத்தனைக்கும் அந்த 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி வந்திருந்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிம்பு ரசிகர்கள் இதனை வீடியோவாக எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... Pathu Thala Review : ஏஜிஆர்-ஆக அதகளப்படுத்தி... ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாரா சிம்பு? - பத்து தல விமர்சனம் இதோ

சென்னை போன்ற வளர்ந்து வரும் நகரத்தில் இப்படி ஒரு தீண்டாமை சம்பவம் நடந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த தியேட்டர் ஊழியரை திட்டித்தீர்த்து வருகின்றனர். படம் பார்க்க ஆசையோடு வந்தவர்களை இப்படி கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அந்த பெண்ணை தியேட்டருக்குள் அனுமதிக்காத ஊழியரிடம் கேள்வி கேட்க தொடங்கியதை அடுத்து அந்த பெண்ணையும் அவருடன் வந்திருந்தவரையும் படம் பார்க்க அனுமதித்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருவதால், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  Cool Suresh : பத்து தல FDFS பார்க்க ஹெலிகாப்டருடன் வந்த கூல் சுரேஷ் - வைரலாகும் வீடியோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!