என்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை கேட்ட மணிரத்னம்! ரொம்ப கஷ்டமா போச்சு... சரத்குமார் ஆதங்கம்!

Published : Mar 29, 2023, 11:45 PM IST
என்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை கேட்ட மணிரத்னம்! ரொம்ப கஷ்டமா போச்சு... சரத்குமார் ஆதங்கம்!

சுருக்கம்

'பொன்னியின் செல்வன் 2' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் தன்னை பார்த்து மணிரத்னம் ரொமான்ஸ் வருமா? என கேட்டு விட்டார் என ஆதங்கத்தோடு பதில் கூறியுள்ளார்.  

தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவான சரத்குமார், சமீப காலமாக... நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமான, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சரத்குமார் நடித்த, காஞ்சனா 2, சென்னையில் ஒரு நாள், வாரிசு, மற்றும் 'பொன்னியின் செல்வன்' போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் தன்னிடம், பொன்னியின் செல்வன் 2 ஷூட்டிங்கின் போது... கேட்ட அந்த ஒரு கேள்வி, மிகவும் வருத்தமடைய வைத்ததாக கூறி உள்ளார் சரத்குமார். 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது, இயக்குனர் மணிரத்னம் சரத்குமாரை பார்த்து உங்களுக்கு ரொமான்ஸ் வருமா என கேட்டாராம். இதனை இன்று நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில், 'இரண்டு முறை காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை பார்த்து, மணிரத்னம் அப்படி கேட்டது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.

தேவதை வம்சம் நீயோ.! குந்தவை திரிஷாவின் கியூட்னஸில் கவிழ்ந்த ரசிகர்கள்.! PS2 ஆடியோ லான்ச் போட்டோஸ்!

'பொன்னியின் செல்வன் 2' படத்தில், நடிகர் சரத்குமார், பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது நந்தினியின் கணவர் இவர் என்பதும் குறிப்பிடதக்கது. சோழ வம்சத்தை சேர்ந்தவர்களை பழி வாங்க வேண்டும் என்பதற்காக, நந்தினி இவரை திருமணம் செய்து கொண்டு, அவரை எப்படி ஆட்டி வைக்கிறார் என்பதை முதல் பாகத்திலேயே பார்த்திருக்க முடியும். 

நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி..! அதிர்ச்சியில் திரையுலகினர்..!

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்த மாதம் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?