சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்... நாங்குநேரி சம்பவத்தால் கொந்தளித்த ஜிவி பிரகாஷ்

By Ganesh AFirst Published Aug 11, 2023, 3:21 PM IST
Highlights

நாங்குநேரியில் சாதி வெறி பிடித்த சிலர் பிளஸ் 2 மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. கூலித் தொழிலாளியான இவருக்கு 17 வயதில் மகனும், 14 வயதில் மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளனர். இதனிடையே பள்ளியில் சக மாணவர்கள் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக முனியாண்டியின் மகன் சின்னதுரை ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீடிலேயே இருந்துள்ளார்.

இதையடுத்து மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகம் சின்னதுரையை பள்ளிக்கு அனுப்புமாறு கூறி இருக்கின்றனர். இதையடுத்து பள்ளிக்கு சென்ற சின்னதுரை சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக கூறி இருக்கிறார். இதையடுத்து இரவு 10.30 மணியளில் வீட்டில் இருந்த சின்னதுரையை மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளது. அதனை தடுக்க வந்த சின்னதுரையின் தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்... தியேட்டர்களை ஆக்கிரமித்த ஜெயிலர்... இந்த வாரம் ஓடிடியில் வரிசைகட்டி ரிலீஸ் ஆன தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

இதையடுத்து சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சின்னதுரையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக 6 மாணவர்களை கைது செய்துள்ள போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இச்சம்பவத்திற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்🙏 சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்

— G.V.Prakash Kumar (@gvprakash)

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என காட்டமாக குறிப்பிட்டுள்ளார். ஜிவி பிரகாஷின் இந்த சமூக அக்கறையை பாராட்டியுள்ள ப்ளூ சட்டை மாறன், “தமிழ்ப்பட ஹீரோக்களில் எளிய மக்களுக்கு குரல் தருபவர்கள் மிகவும் அரிது அல்லது இல்லவே இல்லை. தனது புகழையும், ரசிகர்களையும் சமூக மேம்பாட்டிற்கு பயன்படும் வண்ணம் முன்னெடுப்பவரே அசல் பிரபலம். அதில் ஒருவர்தான் ஜிவி பிரகாஷ். இதே நிலைப்பாட்டை, எந்த சமரசத்திற்கும் ஆட்படாமல், தன் காலமுள்ளவரை எடுக்க வேண்டும். மற்றதெல்லாம் படத்தில் மட்டும் ஏழைகளுக்காக பஞ்ச் பேசி, நிஜத்தில் அட்டகத்திகளாக இருப்பவைகள். வேஸ்ட்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... விஜய்யை தொடர்ந்து ஷாருக்கான் உடன் ஆட்டம் போட்ட அட்லீ... வைரலாகும் ஜவான் பாடலின் மெர்சலான மேக்கிங் வீடியோ

click me!