இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா? தீவிர ரஜினி ரசிகர் போலயே... வைரலாகும் கியூட் வீடியோ..!

Published : Aug 10, 2023, 07:29 PM ISTUpdated : Aug 10, 2023, 07:33 PM IST
இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா? தீவிர ரஜினி ரசிகர் போலயே...  வைரலாகும் கியூட் வீடியோ..!

சுருக்கம்

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் மகன் துருவா ஜெயிலர் படத்தை பார்த்த பின்னர் தீவிர ரஜினி ரசிகராக மாறி... தலைவா என உற்சாகத்துடன் கத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  


பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனான ஏ.எல்.விஜய் இயக்குநர் அவதாரம் எடுத்த முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.  தல அஜித்தை வைத்து ’கிரீடம்' படத்தை இயக்கிய இவர், அதன் பின்னர் ஆர்யாவை வைத்து மதாராசபட்டினம், விஜய்யை வைத்து தலைவா, பிரபு தேவாவை வைத்து தேவி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி, என அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் ஹிட் லிஸ்டில் இணைந்த நிலையில்... ஒரு சில படங்கள் மட்டுமே அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

ஷாரூக்கானுடன் மிரட்டல் லுக்கில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா! வைரலாகும் 'ஜவான்' பட புதிய போஸ்டர்!

தற்போது மிஷன் சேப்டர் 1: அச்சம் என்பது இல்லையே என்கிற படத்தை நடிகர் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் ஏ.எல்.விஜய், தலைவா மற்றும் தெய்வ திருமகள் படங்களை இயக்கியபோது... அதில் நடித்திருந்த நடிகை அமலாபாலை காதலிக்க, பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர், மீண்டும் அமலாபால் திரைப்படங்களில் நடிக்க துவங்கியதால் ஏற்பட்ட பிரச்சனை பெரிதாக வெடிக்க இருவரும் 2017ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். அதன் பின்னர் ஏ.எல்.விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். 

கிழிந்த பாவாடையில் ஆட்டம் போட்ட தமன்னா! புது பாவாடை வாங்கிக்கொண்டு 'ஜெயிலர்' படம் பார்க்க வந்த பிரபலம்!

கடந்த 2019 ஆம் ஆண்டு, ஏ.எல்.விஜய் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில்... 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகிய மகன் ஒருவரும் பிறந்தார். துருவாவின் கியூட் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படம் இன்று வெளியான நிலையில், தந்தை ஏ.எல்.விஜய்யுடன் சேர்ந்து... துருவா இந்த படத்தை பார்த்துள்ளார். 

ரோகிணி தியேட்டரில் 'ஜெயிலர்' கேக் கட் பண்ணி FDFS காட்சியை ரசிகர்களுடன் கண்டுகளித்த ரஜினி குடும்பம்! போட்டோஸ்.!

படத்தை பார்த்த பின்னர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக மாறி, தலைவா என அவர் சத்தமிட்டு காருக்குள் கத்துவதும்... அதை பார்த்து ஏ.எல்.விஜய் ரசித்து சிரிப்பது போல் இந்த வீடியோ உள்ளது. மேலும் ரசிகர்கள் பலர் ஏ.எல்.விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்னுடைய படங்களில் கவர்ந்திழுக்க கூடிய சிறப்பு தலைவர் ஒருவருக்கே உரித்தானது என என்பதை மீண்டும் இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் நிரூபித்துள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!